குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்!

133

குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்….

மேஷம்: எதையும் பொறுமையாக செய்தால் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்: பிறரது சூழ்ச்சியில் மாட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வியாபாரத்தில் கொடுக்கல், வாங்களில் கவனம் தேவை.

மிதுனம்: இறைவனின் பரிபூரண அனுக்கிரகம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பு அமையும். இன்றைய நாளில் விநாயகரை வழிபட எல்லா நலமும் கிடைக்கும். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

கடகம்: குடும்பத்தில் அதிக அன்பு காட்டுவீர்கள். வியாபாரத்திலும், பிஸினஸிலும் சரி, யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. கணவன் – மனைவி உறவின் இணக்கம் வேண்டும். தன லாபம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெறும். தன லாபம் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்ப வாழ்க்கை, வெளியுலக வாழ்க்கை என்று எதிலும் இணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

கன்னி: தேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் உங்களது செயல்பாடு இருக்க வேண்டும். மனதை கட்டுக்கொள் வைக்க வேண்டும். தான, தர்மங்களில் ஈடுபடுவோருக்கு வெற்றி உண்டு. சகல காரியங்களும் அனுகூலமாக முடியும். தன லாபம் உண்டு.

துலாம்: நல்ல தன லாபம், நிறைந்த கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி, பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்வியில் சொல்லி வைத்து முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்: பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வியாபாரிகள் சாதிக்க கூடிய நாள். உடல் நலனில் அக்கறை தேவை.

தனுசு: உடல் நலனில் கவனம் தேவை. நாளை முதல் உங்களுக்கு நல்ல நேரம். வியாபாரிகளுக்கு நல்ல நாள். உயர்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்: கவலை, வேதனை இருந்து கொண்டே இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் ஏற்றம், இறக்கம் இருக்கும். வெற்றிகள் தேடி வரும் நாள்.

கும்பம்: மதுரை மீனாட்சியை வழிபட வேண்டிய நாள். வியாபாரம் செழிக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வளர்ப்பு பிராணிகளின் உடல் நலனில் அக்கறை தேவை. சங்கடங்களை சமாளிக்க வேண்டிய நாள்.

மீனம்: முன்னேற்றம் தேடி வரக் கூடிய நாள். முன்னோர்களின் ஆசி, பெரியோர்களின் ஆசி என்று எல்லாமே கலந்து கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். உடல் நலனில் அக்கறை முக்கியம். சகல காரியங்களும் அனுகூலமாக முடியும்.