குழந்தை பாக்கியம் கிடைக்கும்!

29

குழந்தை பாக்கியம் கிடைக்கும்!

நவம்பர் மாதம் 22 ஆம் தேதியான இன்றைய (22-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (நவம்பர் 22 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். மகிழ்ச்சி குடி கொள்ளும். சஞ்சலங்கள் தீரும். செய்யும் காரியத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கனும். வியாபாரிகளுக்கு போட்டி பந்தயங்களினால் இருந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளால் மாறுபட்ட கருத்துக்கள் உருவாகலாம்.

ரிஷபம்: சிரித்த முகத்தோடு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். பிறருக்கு உதவி செய்தால் உங்களது நட்பு வட்டம் அதிகரிக்கும். மன தைரியத்தில் பல விஷயங்களை சாதிப்பீர்கள். தடைகள் விலகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்: எதையும் முழுமையாக செய்ய வேண்டும். காது பிரச்சனைகள் வரலாம். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.

கடகம்: பிள்ளைகள் வளர்ப்பில் அக்கறை செலுத்த வேண்டும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். தன வரவு உண்டு.

சிம்மம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பதவி உயர்வு தேடி வரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். குடும்ப முன்னேற்றம் மேம்படும். உடல் நலனில் அக்கறை வேண்டும். தொட்ட காரியங்கள் துலங்கும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வியாபார தொடர்புகள் விரிவடையும். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

துலாம்: பாக்கியமான நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். படபடப்பு இருக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். அளவான நன்மைகள் உண்டு.

விருச்சிகம்: நமது குறையை பற்றி சிந்திக்க வேண்டும். இறைவழிபாட்டினால் நன்மை உண்டு. பயணங்களினால் நன்மை உண்டு.

தனுசு: அருமையான நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்திலிருந்த தடைகள் விலகும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

மகரம்: உடல் நலனில் அக்கறை வேண்டும். புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்திற்கு தேவையான கடனுதவிகள் கிடைக்கும்.

கும்பம்: குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் நிம்மதி கிடைக்கும். வியாபாரம் செழிப்பாக நடக்கும்.

மீனம்: வீடு, மனைவி வாங்கும் யோகமான நாள். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. வியாபாரம் வசப்படும்.