கூடா நட்பு கேடில் முடியும்: உஷாரா இருக்கணும்: கன்னி செப்டம்பர் ராசி பலன்!

99

கூடா நட்பு கேடில் முடியும்: உஷாரா இருக்கணும்: கன்னி செப்டம்பர் ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் செப்டம்பர் மாத ராசி பலன்கள்…

கன்னி ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021…

கன்னி ராசி அன்பர்களே…

மிகச்சிறந்த மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் இரு வகையிலான மாற்றங்கள் நிகழும். புகழ், கௌரவம், அந்தஸ்து உயரும். படித்து முடித்து வேலை வாய்ப்புக்கு காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். கல்வியறிவு, பேரறிவு இரண்டும் வேலை செய்யும். இறைவனின் அருள் கிடைக்கும். வியாபார பிரச்சனை நிவர்த்தியாகும்.

குடும்ப வாழ்க்கையிலும் சரி, வெளியுலக வாழ்க்கையிலும் சரி சிக்கலில் சிக்கியிருந்தால் தப்பித்துக் கொள்வீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரியவர்கள் வீட்டில் பாத்ரூமுக்குள் நடக்கும் போது கூட கவனமாக நடக்க வேண்டும். சிலருக்கு வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் வரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் கன்னி ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கூடாத நட்பு கேடில் முடியும் என்பதற்கேற்ப, நண்பனால் கெட்ட பழக்கத்திற்கு செல்லும் நிலை உண்டு. குடும்பத்தில் கணவன் – மனைவி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனதிற்குள் சஞ்சலம் இருந்து கொண்டு இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. உடல் நல பிரச்சனை இருந்தால் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ளலாம்.

செயற்கை முறை கருத்தரித்தலுக்கு முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் உயர்வு கிடைக்கும். கெட்டவன் என்று பெயர் எடுத்தவர்களுக்கு இனி அதிலிருந்து மாற்றம் உண்டாகும். வம்பு, வழக்குகள் இருந்தால் ஒதுங்கி சென்றுவிட வேண்டும். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வேலையிழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு தேடி வரும். பொறுப்புகள் கூடி வரும். மீடியா துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல காலகட்டம். மாணவர்களுக்கு கல்வியில் உச்சத்தை தொடும் காலகட்டம் தற்போது உண்டு.

நன்றாக படித்து முன்னேற்றமடைந்து வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கன்னி ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தை அருமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மாத த்தில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். தினந்தோறும் அருகம்புல் கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.