கைராசியான மருத்துவர் பெயரை பெறுவீர்கள்!

27

கைராசியான மருத்துவர் பெயரை பெறுவீர்கள்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் சிம்ம ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசிப்பலன்…

சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் தரும் மாதமாக, ஒரு வரம் தரும் மாதமாக அமையப் போகிறது. மிகச்சிறந்த முன்னேற்றம், மிகச் சிறந்த வளர்ச்சியும் தரக்கூடிய ஒரு மாதம். தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் செவ்வாய் பகவானும், சுக்ர பகவானும் இருக்கிறார்கள். செவ்வாய் பகவான் உங்களின் பாக்யாதிபதி. அவர் ராசியிலேயே அமர்ந்திருப்பதால், மிகப்பெரிய முன்னேற்றங்களை உருவாக்கித் தருவார்.

முதலில் சில சிரமங்களை கொடுத்து அதன் பிறகு தான் முன்னேற்றங்களை தருவார். ஆகையால், தினமும் நாம் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபட்டு வந்தால் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலேயே உயர் பதவி தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பொழுதும், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் போதும், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: சிம்ம ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 வீடியோ தொகுப்பு!

இந்த மாதம் முழுவதும் பெண்கள் குங்குமத்தை வைத்திருக்க வேண்டும். குங்குமம் தான் பெண்களுக்கு உணர்வுப் பூர்வமான ஒரு பாதுகாப்பு. சிம்ம ராசிக்கார்ர்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மன உறுதி, காரியங்களில் வல்லமை பெண்களுக்கு குடும்பத்தில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.

வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். மனதில் கவலையும், பயமும் இருக்கும். பெரியோர்களுக்கு மனதில் ஒரு தளர்ச்சி இருக்கும். நமக்கு யாருடைய ஆதரவும் இல்லையோ என்று சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது தோன்றிக் கொண்டிருக்கும். ஆனால், எதற்கும் கவலைப் பட தேவையில்லை. ஏனென்றால், இறைவனின் அனுக்கிரகம் உங்கள் மீது விழுகிறது.

சிம்ம ராசி அரசியல்வாதிகளின் பெருமையை இந்த உலகம் பேசும்படியாக இந்த மாதம் அமையப் போகிறது. சர்வ காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். தன லாபம், பொருளாதார லாபம், கல்வி மேன்மை என்று அமையும். வியாபாரத்தில் மிகச் சிறந்த லாபம் வரும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். சிம்ம ராசி மருத்துவர்கள் சிறந்த புகழைப் பெறுவார்கள். கைராசியான மருத்துவர் என்ற பெயரைப் பெறுவார்கள். வேலையிழந்த ஓட்டுநர்களுக்கு இந்த மாதம் வேலை கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். பேரும், புகழும் கிடைக்கப் பெறுவார்கள். இந்த மாதம் தாணு மாலயனை வழங்கி வழிபட வேண்டும். ஓம் தாணு மாலயனே போற்றி என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.