கொலு வைத்து நவராத்திரி வைபவம் கொண்டாட வேண்டும்!

50

கொலு வைத்து நவராத்திரி வைபவம் கொண்டாட வேண்டும்!

அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியான இன்றைய (07-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 07 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: அற்புதமான நாள். தடங்கல் வரும். மன பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம்: நல்ல நட்பு வாழ்க்கையை உயர்த்தும். இன்ப, துன்பங்களில் பங்கு கொள்ளும். நல்ல நண்பர்களால் நன்மை உண்டு. நட்பு கிடைக்கும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. கல்வித்தடை இருக்கும். சந்தோஷ அனுபவம் உண்டு. தன லாபம் கூடும்.

மகரம்: மன பயம் இருக்கும். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை வேண்டும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு: வாழ்க்கை முன்னேறும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டு. தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு பெருகும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஆதரவு பெருகும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. திருமண பந்தங்கள் ஏற்படும். தன வரவு உண்டு.

விருச்சிகம்: கல்வி, தொழில் ஆகியவற்றில் வெற்றி. போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டு. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். ஆஸ்துமா போன்ற வியாதிகளுக்கு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். தன லாபம் உண்டு. முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்ப்புகள் விலகும்.

துலாம்: இயற்கை சூழலை விரும்பக் கூடிய நீங்கள், மாடி தோட்டம் போடலாம். தர்மம் தலை காக்கும். தன லாபம் அதிகரிக்கும். அடிவயிற்று வலி பிரச்சனை இருக்கும். பிறரை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: ஒரு நல்ல நாள். ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். வாந்தி, பேதி வருவதற்கு வாய்ப்பு உண்டு. தொட்டது துலங்கும் நாள். பொறுமையாக செய்தால் வெற்றி உண்டு. தன லாபம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

சிம்மம்: எங்கும், எதிலும் சாதிக்க கூடிய ஆற்றம் உண்டு. ராஜ கிரகத்தின் ராசி. பகலில் அதிக வலிமையுடன் செய்தால் வெற்றி உண்டு. சூரிய வழிபாடு செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். பொழுதுபோக்கு விஷயங்களில் அலட்சியம் கூடாது.

கடகம்: குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கும். பொருளாதார பிரச்சனை இருக்கும். தர்மம் தலைகாக்கும். விமர்சனங்கள் அதிகரிக்கும். வம்பு, வழக்குகளை தவிர்த்தால் மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்: கலைஞர்கள் நிறைந்த ராசி மிதுன ராசி. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்த வருத்தங்கள் நீங்கும். உழைப்பு உயர்வு தரும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்: அற்புதமான நாள். கல்யாணம் கூடி வரும். வாகன யோகம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் ஒரு நாள். பேச்சாளர்கள் புகழ் பெறுவார்கள். வங்கி வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

மேஷம்: நவராத்திரி வைபவத்தை வீட்டில் கொலு வைத்து கொண்டாட வேண்டும். தெய்வ வழிபாடு வாழ்க்கையை உயர்த்தும். குடும்பத்தில் இருக்கும் பொருளாதார பிரச்சனை தீரும். புதிய வியாபார தொடர்புகள் ஏற்படும். தொண்டை தொடர்பான பிரச்சனை வரலாம். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.