கோமியம் தெளித்தால் காசு கொட்டும்!

184

கோமியம் தெளித்தால் காசு கொட்டும்!

லால் என்பதற்கு சிவப்பு என்றும், கிதாப் என்பதற்கு புத்தகம் என்றும் அர்த்தம். இது ஜோதிட சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரங்களைப் பற்றிய குறிப்பு. பொதுவாக ஒருவர் பிறக்கும் போதே அவரது தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டுவிடும்.

ஜோதிடத்தின் படி, கிரக நிலைகளின் அடிப்படையில், ஜாதகக்காரருக்கு கிரக தோஷங்கள் பாதிப்பு அமையும். ஆனால், குறிப்பிட்ட வயது வரை அந்த ஜாதகக்காரருக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, அவரது அப்பா அல்லது அம்மா ஆகியோரில் யாரேனும் ஒருவரைத் தான் அந்த ஜாதகம் பாதிக்கும்.

அதன்படி, ஒருவர் பிறந்தபோதைய கிரக நிலைகளின் பாதிப்புகளுக்கு எளிய முறையில் பரிகாரம் தருகிறது இந்த லால் கிதாப் பரிகாரம். இன்றும் இந்த லால் கிதாப் பரிகாரத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். 12 ராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்ப்போம். அதன் படி, தற்போது துலாம் ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

துலாம் ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

  1. எப்போதும் இறை நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும்.
  2. வெண்ணை, தயிர், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம்.
  3. ஒவ்வொரு வாரமும் வெள்ளி தோறும் வீட்டில் கோமியம் தெளித்து வர செல்வம் பெருகும்.
  4. மாமியார் வீட்டிலிருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் ஆகியவற்றை வாங்கி வைத்தால் வளமான வாழ்வு தரும்.
  5. வீட்டிற்கு வெளியில் நடந்து செல்லும் போது பெண்கள் செப்பல் அணிந்து செல்ல வேண்டும்.
  6. பெண்களிடம் கன்னியமாக பேச வேண்டும். அது உங்களுக்கு நிம்மதி கொடுக்கும்.
  7. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வது நல்லது.
  8. மாமியார் வீட்டிலிருந்து சீதனமாக வரும் பொருளில் பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக் கொள்ள அதிர்ஷ்டம் தேடி வரும்.
  9. வெள்ளித் தட்டில் கொஞ்சமாக தேன் விட்டு வீட்டின் வாசலில் எரிக்க வேண்டும்.
  10. தானமாக எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது. அது வறுமையை ஏற்படுத்தும்.