கோர்ட் கேஸ் இருந்தால் ஒதுங்கி செல்ல வேண்டும்: மேஷ ராசி டிசம்பர் மாத பலன்!

119

கோர்ட் கேஸ் இருந்தால் ஒதுங்கி செல்ல வேண்டும்: மேஷ ராசி டிசம்பர் மாத பலன்!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் டிசம்பர் மாத ராசி பலன்கள் 2021….

மேஷ ராசிக்கான டிசம்பர் மாத பலன்கள் 2021!

முதலில் மேஷம் ராசிக்கான டிசம்பர் மாத ராசி பலன்:

சராசரியான மாதம். வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையக் கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் இருக்கும். பண வரவில் ஏற்ற, இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். வருமானம் தடைபடும். இதே போன்று குடும்ப வாழ்க்கையிலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு வெள்ளியன்றும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம், தடைகள் இருந்தாலும் நிவர்த்தியாகும். எந்தவகை பிரச்சனையாக இருந்தாலும் நிவர்த்தியாகும். வேலை மாற்றம் உண்டாகும்.  கற்பனை எண்ணத்தினால் பிரச்சனை வரலாம். நாக்கில் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். பிள்ளைகளுக்கு உயர்வான காலகட்டம்.

வம்பு வழக்குகள் இருந்தால் ஒதுங்கி செல்ல வேண்டும். கோர்ட் கேஸ் இருந்தாலும் ஒதுங்கி செல்ல வேண்டும். பெண்கள் தங்களுக்கு ஹார்மோன் பிரச்சனை வராதவாறு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி அமையும். இதெல்லாம் வெறும் பொதுவான பலன்கள். அவரவர் சொந்த ஜாதகத்தில் கிரக நிலைகள் எப்படி இருக்கிறதோ அதற்கேற்ப அவர்களுக்கு பலன்கள் அமையும்.