சஞ்சலங்கள் விலகி மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும்!

38

சஞ்சலங்கள் விலகி மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும்!

மே 14 ஆம் தேதியான இன்றைய (14-05-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: விநாயகப் பெருமானின் அனுக்கிரகம் கிடைக்கும். பெருமாள் வழிபாடு வெற்றி தரும். சுதர்சன பெருமாள் மற்றும் நரசிம்ம பெருமாள் வழிபாடு செய்ய எதிரிகள் தொல்லையும், தீராத பிரச்சனை, கஷ்டங்கள் நீங்கும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும்.

ரிஷபம்: அருமையான ஒரு நாள். கல்யாண விஷயங்களில் நல்ல முடிவு எடுக்கலாம். அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் வரும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் தேவையான கடனுதவி கிடைக்கும்.

மிதுனம்: வெற்றிகரமான நாள். அருமையான நாள். திருப்பரங்குன்றம் கிரிவலம் வர வேண்டும். கலைகளில் வெற்றி, கௌரவம் கிடைக்கும். தொழில் முயற்சிகளில் வெற்றி உண்டு. நல்ல பதவிகளும், வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

கடகம்: வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு கட்ட கடனுதவி கிடைக்கும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. நண்பர்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்: மன தைரியம் பெருகும். சிலர் நல்லவர்களாக நடிப்பார்கள். வாழ்க்கையின் உண்மையை சொல்லக் கூடாது. ரகசியத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும். உயர் பதவி யோகங்கள் உண்டு.

கன்னி: தன வரவு உண்டு. மாதத்தின் முதல் சம்பளத்தை இறைவனுக்கு, தர்மத்திற்கு வைத்துவிட வேண்டும். தான, தர்மங்கள் செய்ய வெற்றி உண்டு. காவல் தெய்வத்தை வழிபட வேண்டும். வியாபாரத்தில் வெற்றி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: நன்மைகள் அதிகம் நடக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டு வாய்ப்பு வரும். கடனுதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்: வெற்றிகள் உண்டு. தன்னம்பிக்கை அதிகரிக்கும். உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும். வெளிநாட்டு முயற்சி கை கூடும். திறமைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

தனுசு: அருமையான நாள். மனதில் உள்ள அபிலாசைகள் பூர்த்தியாகும். சஞ்சலங்கள் எல்லாம் விலகும். மனதில் மகிழ்ச்சி உண்டு. வேலை வாய்ப்பு செய்திகள் கிடைக்கும். நட்புகள் கிடைக்கும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்.

மகரம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சண்டை சமாதானத்தில் முடியும். தெய்வ அனுக்கிரகம் உண்டு. பரிகாரம் அல்லது மருத்துவ ஆலோசனையின் மூலம் குழந்தை பிறக்கும். கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகள் பிரச்சனை தீரும்.

கும்பம்: மிக மிக புத்திசாலிகள். வெளிவட்டார தொடர்புகள் வெற்றியடையும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்: நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பீர்கள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக இருக்கும். பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. குல தெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு.