சந்தோஷத்தை அள்ளி அள்ளி கொடுக்கும்: கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்!

148

சந்தோஷத்தை அள்ளி அள்ளி கொடுக்கும்: கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 13 ஆம் தேதியான இன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் கன்னி ராசி – வீடியோ தொகுப்பு!

கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….

புதன் பகவானின் ராசி கன்னி ராசி. வளைந்து கொடுக்கக் கூடிய தன்மை கொண்டவர்கள் இந்த கன்னி ராசிக்காரர்கள். அற்புதமான மனிதர்கள். கொலஸ்ட்ரால், முதுகு வலி பிரச்சனையை கொடுத்திருக்கும். இது வரையில் குரு பகவான் 5ஆவது ஸ்தானத்தில் இருந்தார். இப்பொழுது 6ஆவது ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ஸ்தானத்திற்கு ஆள் அடிமை ஸ்தானம் என்று பெயர்.

ஒருவருக்கு கீழே பணியாற்றக் கூடியதை இந்த 6ஆவது ஸ்தானம் குறிப்பிடுகிறது. வேலை பார்க்கும் இடத்தில் மாற்றம். இதே ஆபிஸ் போன்று நாமும் ஆபிஸ் தொடங்கலாமே. புதன் பகவான் பல நன்மைகளை தருவார். அந்த புதன் பகவானின் வீட்டைச் சேர்ந்த கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் வாய்ப்புகளை வாரி வழங்குவார்.

முதலில் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார். சிக்கல்கள் மறையக் கூடிய ஒரு காலகட்டம். குரு பகவான் உங்களது 10ஆவது இடத்தை பார்க்கிறார். ஒரு நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையப் போகிறது. அடிக்கடி வேலை மாறுதல் எல்லாம் இருக்காது. கடந்த சில மாதங்கள் நீங்கள் மனக்கஷ்டம் அடைந்திருப்பீர்கள். இனி இந்த நிலை மாறி ஒரு சுகமான சூழல் உருவாகும். குடும்பத்தில் இறைவனின் திருவருள் நிறைந்திருக்கும்.

குரு பகவான் உங்களது அயன, சயன ஸ்தானத்தைப் பார்ப்பதால், வேலை மாற்றம், இடமாற்றம் உண்டாகும். கம்பெனி விட்டு கம்பெனி மாறுவீர்கள். சம்பள உயர்வும் உண்டு. துன்பங்கள் மறையும் அற்புதமான காலகட்டம். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கும் நல்ல ஒரு காலகட்டம். திருமண யோகம் கை கூடி வரும். நல்ல தன லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இது வரையில் கணவன் மனைவி உறவில் தொட்டதற்கெல்லாம் சண்டை சச்சரவு என்று இருந்தவர்கள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சந்தோஷமாக வாழ்வார்கள். https://www.youtube.com/watch?v=3eHURswmdFI

பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள், கண்களிலிருந்த பிரச்சனை மறையும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். இப்படி எல்லா வகையிலும் சுபீட்சத்தை தரக்கூடிய இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள், உங்களது உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு பெயர்ச்சியாக இருக்கும். https://www.youtube.com/watch?v=3eHURswmdFI