சனிப்பிரதோஷம் – திருவாசகம் படிக்க வேண்டும்!

48

சனிப்பிரதோஷம் – திருவாசகம் படிக்க வேண்டும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 15 ஆம் தேதியான இன்றைய (15-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்கள் வெற்றி தரும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடக் கூடாது. வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் மந்த நிலை இருக்கும். காது வலி பிரச்சனைகள் வரலாம். தன லாபம் கூடும்.

ரிஷபம்: எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். பயணங்களால் நன்மை உண்டாகும். மனக்கவலை ஏற்படும். தன வரவு உண்டாகும்.

மிதுனம்: கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வயிற்று பிரச்சனை நீங்க கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

கடகம்: சிந்தனைகள் தெளிவாக இருக்க வேண்டும். வீடு வாங்கும் போது கவனம் வேண்டும். தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. தன வரவு பெருகும்.

சிம்மம்: வெற்றிகரமான நாள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிறரது அந்தரங்க காரியங்களில் ஈடுபடக் கூடாது.

கன்னி: முன்னேற்றகரமான நாள். தன வரவு பெருகும். வரவுகள் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். இஎன்டி தொடர்பான பிரச்சனை வரலாம்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: வண்டி, வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வரவுகள் பெருகும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்: பொறுமையாக இருக்க வேண்டும். மாலையில் மௌனமாக இருக்க வேண்டும். தன வரவு உண்டு. சுய பாதுகாப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.

தனுசு: குல தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஏராளமான நன்மைகள் உண்டாகும். தன வரவு கூடும். வண்டி, வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்: இனிய நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நலனில் அக்கறை வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்தி வந்து சேரும். பெண்களுக்கு உயர்வான ஒரு வாழ்க்கை அமையும். திறமைகள் பளிச்சிடும். பிஸினஸில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: முன்னேற்றமான நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குல தெய்வத்தை வழிபட்டால் தொட்ட காரியங்கள் துலங்கும். வரவுகள் பெருகும். மிக அற்புதமான நாள்.

மீனம்: சனிப்பிரதோஷம். சிவனை வழிபட வேண்டும். திருவாசகம் படிக்க வேண்டும். வரவுகள் பெருகும். இஎன்டி தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.