சமூக வலைதளத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

135

சமூக வலைதளத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

செப்டம்பர் 22 ஆம் தேதியான இன்றைய (22-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 22 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: நன்மைகள் அதிகளவில் நடைபெறும் நல்லதொரு நாள். வெளிநாட்டு பிஸினஸுக்கு ஏற்ற நாள். அதில், வெற்றி பெறவும் ஏற்ற நாள். திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் விலகும். 2ஆவது திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் இன்று அதற்கான முயற்சியில் ஈடுபடலாம். மனக்கவலை மாறும்.

கும்பம்: வாகன யோகம் அமையும். வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சமூக வலைதள பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும். மன தைரியம் அதிகரிக்கும். சிறு தூர பயணங்கள் வெற்றி தரும். நடைபாதை வியாபாரிகளுக்கு வெற்றி உண்டு. தன லாபம் உண்டு.

தனுசு: ஏராளமான நன்மைகள் நடைபெறும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: எண்ணிய எண்ணங்கள் நல்லதாக இருந்தால் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரம் வெற்றி கொடுக்கும். வேலை வாய்ப்பு அமையும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

துலாம்: எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே வெற்றி பெறும். சுபகாரியங்கள் கூடி வரும். திருமணம்ச் செய்தி கூடி வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். காதுகளில் வலி வந்து பிறகு சரியாகும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: சந்தோஷமான அனுபவம் கிடைக்கும் ஒரு நாள். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சி வெற்றி கொடுக்கு. வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. கல்வியில் முன்னேற்றம் உண்டு. தன லாபம் உண்டு.

சிம்மம்: எதிர்பார்க்கும் கடனுதவி கிடைக்கும். வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். அளவான நன்மையும் தரும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவி உறவு இனிமையானது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

கடகம்: பாக்யமான நாள். இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்கலாம். புதிய வியாபார முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தின் நன்மை கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மிதுனம்: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். வேலை வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.

ரிஷபம்: முன்னேற்றங்களை அதிகப்படுத்துவீர்கள். வியாபாரம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. அனுகூலமான நாள்.

மேஷம்: முன்னேற்றகரமான சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஞாபத்திறன் வளரும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

https://www.youtube.com/watch?v=PZOZKKXEhQg