சாப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும்!

31

சாப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 16 ஆம் தேதியான இன்றைய (16-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: முயற்சிகள் வெற்றி பெறும். உடல் நலனில் அக்கறை வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. தெய்வ வழிபாடு வெற்றி தரும். தன வரவு பெருகும். வாழ்க்கை ரகசியங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது.

ரிஷபம்: தன வரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. பயணங்களில் நன்மை உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: சிறப்பான நாள். எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் கூடி வரும். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வரவுகள் கூடும். எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் கூடி வரும். தன வரவு பெருகும். உடல் நலனில் அக்கறை வேண்டும்.

கடகம்: சந்தோஷமான அனுபவங்கள் பெருகும் நாள். நண்பர்களால் நன்மை உண்டாகும். பயணங்களினால் வெற்றி உண்டு. பிஸினஸில் முன்னேற்றம், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்: வெற்றிகள் பெருகும் நல்ல நாள். பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும்.

கன்னி: முன்னேற்றகரமான நாள். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. மகிழ்ச்சியான நாள். வீடு கட்டும் முயற்சி வெற்றி தரும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: அதிர்ஷ்டகரமான நாள். நல்ல நல்ல செய்திகள் கூடி வரும். வரவுகள் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம்: மௌனமாக இருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். தன வரவு உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. எதிர்பாராத நற்செய்தி உண்டு. வண்டி, வாகனங்களில் கூடுதல் கவனம் தேவை.

தனுசு: இனிய நாள். தன வரவு பெருகும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். வரவுகள் பெருகும். எதிர்பாராத நல்ல செய்தி வரும். உணவுப் பொருட்களில் கூடுதல் கவனம் தேவை.

மகரம்: வண்டி, வாகனங்களில் கூடுதல் கவனம் தேவை. உடல் நலனில் அக்கறை தேவை. வேலை கிடைக்கும் இளைஞர்களுக்கு நல்ல தகவல் வரும். எதிர்பார்க்கும் கடனுதவி கிடைக்கும். சுய பாதுகாப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்: இனிய நாள். எதிர்பாராத நற்செய்தி உண்டு. குல தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும். தன வரவு கூடும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றும் சேருவார்கள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரம் லாபமாக அமையும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.