சாமியாராக சென்றுவிடலாம் என்று யோசனை வரும்!

146

சாமியாராக சென்றுவிடலாம் என்று யோசனை வரும்!

செப்டம்பர் 01 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் 2021…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 01 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம்: எல்லா காரியங்களும் அனுகூலமாக முடியும். ஆகச் சிறந்த நாள். நிணநீர் மண்டலம் நன்றாக இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ரிஷபம்: குதூகலமான நாள். வாழ்க்கை வாழ்வதற்கு தான் என்ற சந்தோஷம் பெருகும். அலுவலகத்தில் ஆயிரம் தொந்தரவுகள் இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கூடி வரும்.

மிதுனம்: நல்ல அறிவுக் கூர்மை, சாமர்த்தியம் வெளிப்படும் நாள். ஒரு விவேகமான தன்மை கொண்டவர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்: பல மாற்றங்களை சந்திப்பீர்கள். விளையாட்டு துறை வீரர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் நாள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வரும். மாலை நேரத்தில் எதிரிகளை வென்று குவிப்பீர்கள்.

சிம்மம்: வெற்றிகரமான நாள். கோளறு பதிகம் படித்தால் அலுவலக பிரச்சனை தீரும். ஞானசம்பந்தரின் கோளறு பதிகம் படித்தால் துன்பங்கள் நீங்கும். காசு, பணம் கூடும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும்.

கன்னி: இளைஞர்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வெற்றிகரமான வாய்ப்பு அமையும். கடல் சார்ந்த பணி செய்பவர்களுக்கு அனுகூலமான தகவல் தேடி வரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: கால்களில் பாதிப்பு வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவர் ஆலோசனையுடன் ஜோதிடர் ஆலோசனையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஒரு சில பிரச்சனைகள் வரும். சுய ஜாதகத்தை பார்த்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: எந்த காரியமாக இருந்தாலும் பதமாக செய்ய வேண்டும். அவசரம் தேவையில்லை. முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

தனுசு: நிறைந்த நன்மைகளை பெறப் போகும் ஒரு அற்புதமான நாள். கணவன் – மனைவி உறவில் சலசலப்புகள் இருந்தாலும் அழகாக சமாளிப்பீர்கள். வியாபாரம் வெற்றிகரமாக அமையும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.

மகரம்: அனைத்து காரியங்களும் வெற்றி பெறக் கூடிய ஒரு நாள். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். யாரையும் பகைத்து கொள்ளக் கூடாது. தன லாபம் உண்டு.

கும்பம்: ஏராளமான நன்மைகள் தேடி வரும் நல்ல நாள். சாதனைகள் புரிவதற்கு வாய்ப்பு உண்டு. விஞ்ஞானிகள் பேரும், புகழும் பெறுவார்கள். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மீனம்: வீடு, வாகனம் வாங்க ஆசை வரும். சொந்த ஜாதகத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும். சிலருக்கு சாமியராக சென்றுவிடலாம் என்று யோசனை வரும். முதலீட்டில் கூடுதல் கவனம் வேண்டும்.

https://www.youtube.com/watch?v=D9UeLnog2uU