சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்!

43

சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்!

அக்டோபர் மாதம் 21 ஆம் தேதியான இன்றைய (21-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 21 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். வியாபாரம் நன்றாக நடைபெறும். பெண்களுக்கு தடை இருக்கும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். அக்கம் பக்க வீட்டாரிடம் இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். அலுவலகத்தில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மகரம்: எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தைரியம் அதிகரிக்கும். அரசு வழி காரியங்கள் எளிதில் நடந்து முடியும். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தார் அக்கறை காட்டுவார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். அருமையான நாள்.

தனுசு: இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க்கையில் ஒருபடி முன்னேறும் நாள். தன லாபம் உண்டு. பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

விருச்சிகம்: மயிலை கற்பகவள்ளியை வழிபட வேண்டும். இந்த நாளில் கற்பகவள்ளி அம்மனை மனதில் நினைத்தாலே வெற்றி உண்டு. கற்பகாம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டு. புதிய முயறசிகளை தவிர்ப்பது நல்லது. தன லாபம் உண்டு.

துலாம்: எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கல்யாண முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களால் நன்மை உண்டு. காரியங்களில் வெற்றிகள் உண்டு. நிறைய மாற்றங்கள் நிகழும் நாள். பகலில் பக்கம் பார்த்து பேசிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: மௌனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். தேவையான நல்ல செய்திகள் வரும். கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்: மனமகிழ்ச்சியான ஒரு நாள். தெளிவாக இருப்பீர்கள். முயற்சித்த காரியங்கள் வெற்றி பெறும். உடல் நலனில் அக்கறை வேண்டும். அளவான நன்மைகள் உண்டு. அரசியல், அலுவலகத்தில் வெற்றி உண்டு. குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

கடகம்: நல்ல வேலை வாய்ப்பு அமையும். பேச்சில் நிதானம் தேவை. வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிம்மதியான நாள். சமூக வலைதளங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை வேண்டும்.

மிதுனம்: வேலையில் கவனமாக இருக்க வேண்டும். சிந்தாமல், சிதறாமல் எதையும் செய்ய வேண்டும். தாயாரது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியாக சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷபம்: மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நல்ல தன லாபம் உண்டு. தொட்டதெல்லாம் துலங்கும் நாள்.

மேஷம்: மனதுக்குள் பரபரப்பு இருக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தொட்டது துலங்கும் நல்ல நாள். https://www.youtube.com/watch?v=_RUqHrhB5HQ