சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கூடி வரும்!

32

சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கூடி வரும்!

ஜூலை 30 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (30-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வாழ்க்கை சுகங்களை அனுபவிக்கும் நாள். கடன் அடைபட முயற்சி மேற்கொள்ளலாம். உடல் நல பிரச்சனை சரியாகும். வாழ்க்கை பிரச்சனை தீர ஜோதிட ஆலோசனை எடுத்துக் கொள்ளலாம். பொருளாதார பிரச்சனை தீரும். புரளியை காது கொடுத்து கேட்க கூடாது.

ரிஷபம்: மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். சிறு தூர பயணங்களில் கவனம் தேவை. ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும். பெரியவர்களின் ஆசிர்வாதம் உண்டு. தான, தர்மம் செய்ய வேண்டும்.

மிதுனம்: தன வருமானம் வரும். வீடு, மனை கட்டும் யோகம் உண்டாகும். தாய்மை பேறு யோகம் கிடைக்கும். வியாதிகள் குணமாகும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பகைமை விலகும் அற்புதமான நாள்.

கடகம்: மிக அருமையான நாள். பதற்றம் நிலவும். நெருக்கடிகள் இருக்கும். வாழ்க்கையில் ஜெயிப்பீர்கள். உலகம் ஆயிரம் சொல்லும். ஆனால், மனதிற்கு நல்லவனாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வெற்றி உண்டு. வெளிநாட்டு யோகம் கூடி வரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

சிம்மம்: வீண் விரையங்களை தவிர்ப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகளாக செய்து கொள்ள வேண்டும். சகோதரர்களின் வாழ்க்கை நலனில் அக்கறை வேண்டும்.

கன்னி: ஏராளமான அளவில் நன்மைகள் நடக்கும். மூத்த சகோதரிகளின் ஒத்துழைப்பு உண்டு. தாயாரது ஆசிர்வாதம் உண்டு. பாராட்டுகளும், ஆசிர்வாதங்களும் கிடைக்கும் அற்புதமான நாள்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கூடி வரும். திருமண விஷயங்கள் கை கூடும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

விருச்சிகம்: பிஸினஸ் தடை நீங்கி லாபம் கூடும். நல்ல லாபங்கள் பெருகும். உயர் கல்வி யோகம் உண்டு. திருமணம் நிச்சயமாகும்.

தனுசு: கணவன் மனைவி உறவில் சாந்தமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரிகள் அளவாக முதலீடு செய்ய வேண்டும். அலுவலகத்தில் தேவையில்லாத பிரச்சனை கூடாது. பொறுமையாக இருப்பது அவசியம்.

மகரம்: அற்புதமான நாள். வெளிநாட்டு யோகம் கூடி வரும். உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. புதிய மாற்றங்களை உணர்வீர்கள்.

கும்பம்: மருத்துவர்களுக்கு அற்புதமான நாள். தான, தர்மங்கள் செய்ய வேண்டும். தெய்வ வழிபாடு வெற்றி தரும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டு.

மீனம்: மனதில் உள்ள எண்ணங்கள் வெற்றி பெறும். தெய்வ அனுக்கிரகம் உண்டு. இளைஞர்கள் காதல் வயப்படும் நாள். தொட்டது துலங்கும் அற்புதமான நாள்.