சிம்மம் ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

106

சிம்மம் ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் அக்டோபர் மாதத்திற்கான 12 ராசிகளுக்கான ராசி பலன்….

சிம்மம் ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் 2021….

மேலும் படிக்க: சிம்மம் ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் – வீடியோ!

சிம்மம் ராசிக்காரர்களுக்கு 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். எதிலும் எச்சரிக்கையாகவும், நிதானமாக இருக்க வேண்டும். காரில் பயணம் செய்பவராக இருந்தால் பொறுமையாக மனம் பதற்றமில்லாமல் ஓட்டி சென்று வர வேண்டும்.

கிரகத்தின் சுழற்சி பாதக நிலையில் இருப்பதால் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் மிக கவனமாக இருக்க வேண்டும். 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் ஓரளவு சிறப்பாக இருந்தாலும், 21ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் எந்த காரியத்தைச் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து அந்த காரியத்தை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். பேசும் போது தடுமாற்றத்தில் வார்த்தையை விட்டு விடக்கூடாது. கிரகத்தில் சுழற்சி பாதகமாக இருப்பதால் குடும்பத்தின் கணவன் – மனைவிக்கிடையில் சண்டை, சச்சரவுகள் வரும். குழந்தைகள் பிரச்சனை என்று எதுவாக இருந்தாலும், விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மேலும், பொறுமையாக இருக்க வேண்டும்.

உணவில் கவனம் வேண்டும், பேச்சில் கவனம் தேவை, செயலில் கவனம் வேண்டும். தடுமாற்றங்கள் இருந்தாலும் மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்படியாக கிரகத்தின் சுழற்சி தளர்ச்சியாக இருப்பதனால், 100க்கு 57 சதவிகிதம் மட்டுமே நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும்.