சிவனை வழிபட வேண்டும்; பசித்த வயிற்றுக்கு உணவளிக்க வேண்டும்!

40

சிவனை வழிபட வேண்டும்; பசித்த வயிற்றுக்கு உணவளிக்க வேண்டும்!

நவம்பர் 07 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (07-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அற்புதமான நாள். மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்ள ஏற்ற நாள். நீங்கள் சந்திப்பவர்கள் மாறுபட்ட குணங்களை கொண்டிருப்பார்கள். கல்யாண செய்தி உண்டு. விஐபிக்களின் தொடர்பு கிடைக்கும்.

ரிஷபம்: கடுமையாக உழைக்க வேண்டும். வேலை மாறுதல் குறித்து எண்ணம் மேலோங்கும். உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல மாற்றங்கள் உருவாகும்.

மிதுனம்: மகிழ்ச்சியான ஒரு நாள். நல்ல காலங்கள் வரும். பொன்னான நாள். பொருளாதாரத்தில் முன்னேற்றமான நாள். பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். மிகுந்த வெற்றிகளை கொண்டு வந்து தரும். எதிரிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். வேலை வாய்ப்பு கிடைக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் இருக்கலாம். பொழுதுபோக்கு விஷயங்களிலும் கேளிக்கை விஷயங்களிலும் மனம் ஈடுபடும்.

கடகம்: மிக அற்புதமான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். விநாயகர், துர்க்கையை வழிபட வேண்டும். அருகம் புல்லினால் விநாயகருக்கு மாலையிடலாம். நிம்மதியான நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

சிம்மம்: எதையும் செய்யக் கூடிய துணிச்சல் உண்டு. வாழ்க்கைத் துணையிடம் முடிவு எடுப்பது குறித்து கேட்க வேண்டும். சமூக வலைதளங்களில் எச்சரிக்கை தேவை. தன வருமானம் வரும். மிகச்சிறப்பான நாள். வியாபாரத்தில் வெற்றிகரமான நாள்.

கன்னி: இறைவனே கதி என்று இருக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

துலாம்: அற்புதமான நாள். தானம், தர்மம் செய்ய வேண்டும். எல்லாமே எனக்கு என்று நினைக்கவே கூடாது. அரசு வேலைக்கு முயற்சிக்கலாம். விஐபிக்களின் தொடர்பு உண்டாகும். தோல் தொடர்பான பிரச்சனை வரலாம்.

விருச்சிகம்: கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் பயப்பட தேவையில்லை. உடல் நலனில் அக்கறை தேவை. நடைபயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பிறர் சொல்லி வாழக் கூடாது. ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும். வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு: சிவனை வழிபட வேண்டும். இறைவனின் அருள் கிடைக்கும். ஏழை குழந்தையின் படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும். பசித்த வயிற்றுக்கு உதவி செய்ய வேண்டும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டு. இறைவன் வசதியை கொடுப்பான். எல்லோருக்கும் உணவளிக்க வேண்டும். நல்ல மனதோடு செயல்பட வேண்டும்.

மகரம்: வேலையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று எண்ணம் மேலோங்கும். நல்ல வேலை கிடைக்கும். ஏராளமான நன்மைகள் நிறைந்த நாள். சொத்து சுகம் வாங்க கூடிய நாள். உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம்: மன தைரியம் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். தந்தை வழி உறவினர்களுக்கு சில பாதிப்புகள் வரலாம். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்: தன வருமானம் வரும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. செய் தொழிலில் முன்னேற்றம் உண்டு. புதிதாக வீடு, வாசல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.