சுய ஒழுக்கத்தில் எச்சரிக்கை தேவை, ஹெல்மெட் அணிய வேண்டும்!

89

சுய ஒழுக்கத்தில் எச்சரிக்கை தேவை, ஹெல்மெட் அணிய வேண்டும்!

செப்டம்பர் 05 ஆம் தேதியான இன்றைய (05-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 05 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நல்லதொரு நாள். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கடனுதவி கிடைக்கும். வியாபாரம் வெற்றி பெறும்.

கும்பம்: உங்களது உடல் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன லாபம் உண்டு. எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதாவதற்கு வாய்ப்பு உண்டு.

மகரம்: யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அப்பாவின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அரசு அதிகாரிகளிடம் பகை கூடாது. தன லாபம் உண்டு.

தனுசு: சுய ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. சிறுதூர பயணங்களில் கவனமாக செல்ல வேண்டும். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யாதீர்கள். முகக் கவசம் அணியாமல் வெளியில் செல்ல கூடாது.

விருச்சிகம்: தொட்டது எல்லாம் துலங்கும். குடும்பத்தில் ஏராளமான நன்மைகள் உண்டாகும். தந்தையாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தன லாபம் உண்டு. புகழ் பெறும் யோகம் உண்டு.

துலாம்: இந்த நாள் இனிய நாளாக எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும் நாளாக அமையும். நண்பர்களால் நன்மை உண்டு. நல்ல ஆரோக்கியம் தன லாபம் உண்டு. யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: எதிர்பார்க்கும் காரியங்கள் தாமதமாக நடைபெறும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மார்பக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்: இனிய நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பதவி, புகழ், வெற்றி என்று அனைத்தும் உங்களை தேடி வரும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

கடகம்: எதிர்பார்க்கும் காரியங்களில் ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். உடல் நலத்தின் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் புகழ் பெறுவீர்கள். சிறுதூர பயணங்களில் கவனம் தேவை.

மிதுனம்: தன லாபம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். வெற்றிகரமான நாள்.

ரிஷபம்: எண்ணிய எண்ணங்கள் மிகச்சிப்பாக வெற்றி பெறும். குடும்ப வாழ்க்கை நிம்மதி தரும். வியாபாரம் கூடுதல் வெற்றியைத் தரும். தன லாபம் உண்டு.

மேஷம்: எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு வாங்கும் எண்ணம் தோன்றும். வண்டி, வாகனங்களை பழுதுநீக்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

https://www.youtube.com/watch?v=_NLLyQSXNlo