சுய ஒழுக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்!

106

சுய ஒழுக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்!

செப்டம்பர் 02 ஆம் தேதியான இன்றைய (02-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 02 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: ஏராளமான நன்மைகள் தேடி வரும் நல்ல நாள். மனைவியின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். சர்க்கை வியாதி இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை எடுத்து கொள்ள வேண்டும்.

கும்பம்: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்க கூடிய நாள். எதிரிகள் தொல்லை விலகும் நாள். சமாதானத்திற்கு வருவார்கள். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மகரம்: கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். பகைவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

தனுசு: இந்த நாள் மிகச்சிறந்த நாளாக அமையும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் வெற்றி வேண்டுமா இன்று முயற்சி செய்யலாம். பிற்பகலில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

விருச்சிகம்: பிறரது குறிப்பு அறிந்து நடக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டிய நாள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் பொறுமை அவசியம். தொழில் தொடங்கும் முயற்சிகளை கொஞ்சம் தள்ளி போட வேண்டும்.

துலாம்: அற்புதமான நாள். பாக்கியமான நாள். மூதாதையர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பித்ரு காரியங்கள் செய்ய வேண்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: எங்கும், எதிலும் மிகச்சிறந்த வெற்றிகளை பெறலாம். நல்ல வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. சுய ஒழுக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்: சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் அற்புதமான வெற்றியை பெறலாம். மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதி படைத்தவர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு.

கடகம்: வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்நோக்க வேண்டிய நாள். மாற்றத்தை தடுத்தால் முன்னேற்றம் வராது. எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும்.

மிதுனம்: மிகவும் நல்ல நாள். விஷ்ணு சஹசர நாமம் சொல்ல வேண்டும். இல்லையெனில், வியாபாரம் தொடர்பான அலுவலகத்தில் ஒலிக்க செய்ய வேண்டும். வியாபாரத்தில் இருக்கும் குற்றம் குறைகளை கலையும். நன்மை அளிக்கும். மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சியை உருவாக்கித் தரும்.

ரிஷபம்: தன லாபம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நன்மையில் முடியும். திரைப்பட துறையில் புதிய வாய்ப்புகளை இன்று தேடலாம். கவிஞர்கள், எழுத்தாளர்கள் புகழ் பெறுவார்கள்.

மேஷம்: தைரியமான, மன ஆரோக்கியமான, வெற்றிகளைப் பெறக்கூடிய நாள். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மன வருத்தம் ஓடுகிறது. திருவிளக்கு பூஜை செய்ய வேண்டும்.

https://www.youtube.com/watch?v=Vb0KSgf9hrs