செல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி வழிபாடு!

70

செல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி வழிபாடு!

செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்றைய (26-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 26 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும். பேச்சுவார்த்தை அருமையாக இருக்கும். துர்க்கை வழிபாடு கூடுதல் நன்மைகள் கொடுக்கும். காது தொடர்பான தொந்தரவுகள் வரும். பொருளாதார நிலை உயரும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சகல காரியங்களும் நன்மையாக முடியும்.

கும்பம்: தேக ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். எதிரிகளின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தன லாபம் உண்டு.

மகரம்: பொழுதுபோக்கு விஷயங்களில் பாதுகாப்பு அவசியம். உடல் நலனில் அக்கறை வேண்டும். போதைப் பழக்க வழக்கங்களில் ஈடுபடக் கூடாது. வரவு அதிகரிக்கும். எனினும் ஒருவிதமான பதற்றம் இருக்கும். அளவான நன்மைகள் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு: மகாலட்சுமி வழிபாடு செல்வ செழிப்பை கொண்டு வந்து தரும். போட்டி, பந்தயங்களை சமாளிப்பீர்கள். வேலை குறித்தும், புதிய மாற்றங்கள் குறித்தும் சிந்திப்பீர்கள். ஆதாயகரமான நாள். காலைப் பொழுது தன லாபம் உண்டு. மாலைப் பொழுது மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்: நல்ல நல்ல செய்திகள் தேடி வரும். நல்ல பிஸினஸ் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருள் வரவு உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு.

துலாம்: நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வரும். சுபச் செய்திகள் கூடி வரும். செலவினங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். எண்ணிய காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: புதிய முயற்சிகள் வெற்றி பெறும் நாள். கோபத்தை உண்டாக்கி தரும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இடம் மாற்றம் குறித்த சிந்தனைகள் மேலோங்கும். பயணங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிற்பகலில் யோகமான நாள்.

சிம்மம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். மனம் விட்டு பேசுவீர்கள். வெற்றிகரமான நாள். தன லாபம் கூடும். பிற்பகல் யோகமான நாள்.

கடகம்: வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொள்வீர்கள். எதையும் நினைத்து கவலைப் பட தேவையில்லை. வியாபாரத்தில் வெற்றி உண்டு. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். செலவு அதிகரிக்கும். சிலருக்கு பயணங்கள் அமையும். தன லாபம் உண்டு. பார்த்து, அக்கம் பக்கம் பார்த்து பேச வேண்டும்.

ரிஷபம்: உடல் நலனில் அக்கறை வேண்டும். வேலை வாய்ப்பு முயற்சி மேற்கொள்ளலாம். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு நல்லதொரு நாள்.

மேஷம்: வேலை வாய்ப்பு முயற்சி மேற்கொள்ளலாம். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. ஏராளமான நன்மைகள் நடைபெறும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.