சொத்து, சுகம் சேரும்; விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும்!

34

சொத்து, சுகம் சேரும்; விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும்!

ஆகஸ்ட் 09 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (09-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பைரவர் ஸ்லோகம் சொல்ல நன்மைகள் பெருகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய புதிய சிந்தனைகள் தோன்றும். கண்களில் பிரச்சனை வரலாம். திருமண விஷயங்கள் கூடி வரும்.

ரிஷபம்: மனக்கஷ்டம் நீங்க 8 பேருக்கு தண்ணீர் தானம் செய்யலாம். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். தொழிலில் நெருக்கடி வரலாம்.

மிதுனம்: இறைவனின் அனுகூலம் பரிபூரணமாக உண்டு. மனோ தைரியம் அதிகரிக்கும். நல்ல வருமானம் வரும். சொல்லுக்கு குடும்பத்தார் கட்டுப்படுவார்கள். திரைப்பட துறையில் உங்களது பங்களிப்பு இருக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு முன்னேற்றமான நாள்.

கடகம்: உத்தியோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் கோபம் உண்டாகும். பொறுமையாக இருக்க வேண்டும். தோல் பிரச்சனை வரலாம். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு.

சிம்மம்: அனுகூலமான நாள். திருமணம் கூடி வரும். அன்பு பிள்ளைகளுக்கு வெளியூர், வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டு.

கன்னி: கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். வேலை வாய்ப்பு கிடைக்கும். பிஸினஸ் முயற்சிக்கு ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கான வேலைகளை செய்யலாம். பெண்கள் சுய பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பயணங்களினால் நன்மை உண்டாகும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மனோ தைரியம் பெருகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நல்ல நட்புகள் உண்டாகும்.

விருச்சிகம்: உடன் இருப்பவர்கள் எதிரிகளாக இருப்பார்கள். பகைவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வியாபார முயற்சி வெற்றி பெறும்.

தனுசு: சொத்து, சுகம் சேரும் நேரம். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வாகனம் வாங்கும் போது சுய ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

மகரம்: இந்த நாள் நல்ல நாள். நிறைய மாற்றங்கள் உருவாக கூடிய நாள். முன்னேற்றத்தை தரும் ஒரு நாள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. தன வருமானம் கூடும்.

கும்பம்: ஏராளமான நன்மைகள் நடக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. மனைவியிடம் சரணடைய வேண்டும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தன லாபம் பெருகும் நாள்.

மீனம்: வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. முதுகுவலி பிரச்சனை வரலாம். குடும்பத்தில் நெருக்கடி வரலாம். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். தோல் பிரச்சனை வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை.