சொத்து பிரச்சனை வரும்: மேஷ ராசி ஆவணி மாத ராசி பலன்!

36

சொத்து பிரச்சனை வரும்: மேஷ ராசி ஆவணி மாத ராசி பலன்!

மேஷ ராசிக்கான ஆவணி மாத பலன்கள்….

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் மேஷ ராசிக்கான ஆவணி மாத ராசி பலன்…

ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, செவ்வாய் பகவான் 22 நாள் குரு பார்வையில் சிம்மத்தில் இருக்கிறார். ஒன்றாம் இடத்து அதிபதி 5ல் அமர்ந்து குரு பார்வையில் இருக்கும் பொழுது, இந்த 22 நாளும் ஒரு அற்புதமான நாள். உங்களுக்கு கௌரவம், புகழ், அந்தஸ்து, தன்னம்பிக்கை, செல்வாக்கு உயரக்கூடிய ஒரு நிலை.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் மேஷ ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

அதே நேரத்தில் 2ஆம் இடத்து அதிபதி என்று சொல்லக் கூடிய சுக்கிர பகவான் உங்களுக்கு அதிகபட்சமாக 6ஆவது இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஆறில் அமர்ந்து நீச்ச பங்கம் அடைகிறார். புதன் அங்கு 24 நாட்கள் இருக்கிறார். சுக்கிரன் 21 நாட்கள் இருப்பார். அதன் பிறகு சுக்கிர பகவான் ஆட்சி பெற்று துலாம் ராசியில் ஒரு 10 நாட்கள் இருப்பார். ஓரளவு பண வரவு, வசதிகள் நிச்சயமாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் செய்யலாம்.

அதே நேரத்தில் கடைசி 10 நாட்கள் ரொம்பவே அமர்க்களமாக இருக்கும். இதுவரையில், திருமணத்திற்கான பேச்சுவார்த்தை தள்ளிப் போயிருக்கும். இந்த காலகட்டத்தில் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை எடுத்தால் நல்ல படியாக முடியும். திருமணமும் விரைவில் முடியும். 2ஆம் இடத்து அதிபதி 2க்கும் இக்கும் இடையில் ஆட்சி நிலையில் இருக்கிறார். ஆக இந்த ஆவணி மாத இறுதியில், கடைசி 10 நாட்கள் மொத்தத்தில் நன்றாக இருக்கும். அதில் குறிப்பாக அந்த 10 நாட்களும் திருமணம் கை கூடி வருவதற்கான நல்ல காலம்.

மேஷத்திற்கு ராகு ரிஷபத்தில் இருக்கும் வரையில் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இதன் காரணமாக பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில், விருந்தினர்களிடையே கொஞ்சம் நிதானமாக பேச வேண்டும். இல்லையென்றால், பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துவிடும். 3ஆம் இடத்தை குரு பார்க்கிறார். இது மாபெரும் சிறப்பு.

எடுத்த காரியங்கள் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடியும். இளைய சகோதரத்தால் ஆதரவு உண்டு. 3ஆம் இட த்து அதிபதியான புதன், 6ஆம் இடத்தில் 24 நாட்கள் உச்சம் அடைகிறார். முதல் ஒருவாரம் சிம்மத்தில் அமர்ந்து குரு பார்வையில் இருக்கிறார். கல்வி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய அன்பர்கள், மாணவ, மாணவியர்கள் என்று இவர்கள் அனைவருக்கும் இந்த ஆவணி மாதம் மிகவும் அற்புதமான மாதம்.

கல்வி நிறுவனங்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தக் கூடிய அமைப்பு இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு நல்ல தகவல் வந்து சேரும். 4ஆம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். அதனால், சொத்து வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

தாயாரின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். சிம்மத்தில் அதிபதி சூரியன் அங்கு 30 நாட்கள் இருக்கிறார். ஆவணி மாதத்தில் தான் சூரிய பகவான் சிம்மத்தில் ஆட்சி நிலை பெறுகிறார். அதோடு குரு பார்வையிலும் இருக்கிறார். அரசுப் பதவி, அரசுத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பேரும், புகழும் உண்டாகும்.

வேலை பார்க்கும் இடத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும். ரிஷிகள், முனிவர்கள், குருமார்களின் ஆசி கிடைக்கும். கணவன் – மனைவி ஒற்றுமை, பரஸ்பரம் இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தந்தை, தந்தை வழி சொந்தங்களால் அனுகூலம், ஆதாயம் உண்டாகும். ஆவணி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும் நாள்.