சொத்து பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு!

87

சொத்து பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு!

செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்றைய (15-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 15 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சந்தோஷமான அனுபவங்கள் பெருகும் நல்லதொரு நாள். ஏராளமான நன்மைகள் நடைபெறும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சொத்து பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வில்லங்க, விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.

கும்பம்: நன்மைகள் உண்டு. உடல் நலனில் பாதிப்பிருந்தால் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். எதிரிகள் தொந்தரவு மறைய முயற்சி எடுக்க வேண்டும். சொத்து இருந்தால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகரம்: வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். உயிர் நண்பனை பகைத்துக் கொள்ளும் சூழல் சில நேரம் வந்து சேரும். தன வரவு உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை.

தனுசு: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும் நாள். வியாபாரிகளுக்கு பிற்பகலில் வெற்றிகள் குவியும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: சந்தோஷமான அனுபவங்கள் பெருகும் நல்லதொரு நாள். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும். தன வரவு வரும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

துலாம்: காமாட்சி அம்மனை வழிபட வெற்றிகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு. தன வரவு வந்து சேரும். பெண்களுக்கு நல்ல நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்: இறைவனின் கருணை இருக்கும். விநாயகரை வீட்டில் வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும். தன வரவு உண்டு.

கடகம்: வேலை வாய்ப்பு தேடக்கூடியவர்களுக்கு இனிமையான நாள். தைரியம், அதிகாரம் இருக்கும். வியாபாரிகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் தற்போது உண்டு. மனக் கஷ்டங்கள் தீரும்.

மிதுனம்: தன வருமானம் வரும். சந்தோஷமான அனுபவங்கள் வரும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல வரவுகள் வந்து சேரும். பொதுமக்கள் தொடர்புடைய துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும். கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: நிதானம் வேண்டும். அபிஷேகங்களில் கலந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டு.

மேஷம்: அற்புதமான நாள். தான தர்மங்கள் செய்ய வேண்டும். ஏழைக் குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். வியாபாரத்திற்கு தேவையான கடனுதவி கிடைக்கும். தன வருமானம் உண்டு.

https://www.youtube.com/watch?v=h-F7cb-7Ovc