சோதனைகள் சாதனைகளாக மாறும் மாதம்!

117

சோதனைகள் சாதனைகளாக மாறும் மாதம்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் கன்னி ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசிப்பலன்…

கன்னி ராசிப்பலன்: சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மாதமாக இந்த மாதம் இருக்கும். கன்னி ராசிக்கு அதிபதியாக இருக்கக்கூடிய புதன் பகவான் இந்த மாதம் துவங்கும் போது லாப ஸ்தானத்தில் இருக்கிறார். லாப ஸ்தானத்தில் இருந்தாலும், ஒரு திருப்தியான மனநிலையில் இல்லை. இதனால், அடிமனதில் ஒரு குழப்பம், மன கழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு முன்னேற்றம் காண வேண்டிய மாதமாக இந்த மாதம் இருக்கப் போகிறது.

முழு தொகுப்பிற்கு இங்கே கிளிக் செய்யவும்: நங்கநல்லூர் பஞ்சநாதனின் கன்னி ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

குடும்பத்தில் ஒரு இனம் புரியாத இழப்பு. அது ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்று கூறமுடியாத அளவிற்கு இழப்பு. சிலருக்கு உடல் நலக் குறைவுகள். வாழ்நாள் துயரம், வியாபாரத்தில் சில சஞ்சலங்கள். இப்படியெல்லாம் இருந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் பகவான் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரப் போகிறார். ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். அதன் பிறகு இளைஞர்களுக்கு நல்ல வேலை மாற்றம் அமையும். வேலையே இல்லை என்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையை விட்டு நின்றவர்கள், புதிய வேலைக்கு முயற்சித்து கொண்டிருப்பவர்கள் தற்போது வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்பு அமைந்தால் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டாம். வரும் 24 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்றுக் கொள்வது நன்மை பயக்கும். வியாபாரிகளுக்கு மாதத்தின் தொடக்கத்தில் லாபம் குறைவாகவும் மாத இறுதியில் லாபம் அதிகமாகவும் இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சி வெற்றியடையும், வெளிநாட்டு தொடர்பு அதிகரிக்கும். வியாபாரம் செய்வதற்கு தேவையான கடனுதவி கிடைக்கும்.

பெண்களைப் பொறுத்தவரையில் 12 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் அமர்ந்திருக்கிறார். அவர் அட்டமாதிபதியுடன் சேர்ந்திருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் வழிபட வேண்டிய தெய்வம் மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமரை வழிபட வேண்டும். ஓம் ஏரிகாத்த ராமரே போற்றி என்று தினமும் 108 முறை உச்சரிக்க வேண்டும். அப்படி சொல்லி வர உங்களது வாழ்க்கையில் எல்லா உயர்வுகளும் தேடி வரும்….