தடைகளை தாண்டி வெற்றி கிடைக்கும்!

26

தடைகளை தாண்டி வெற்றி கிடைக்கும்!

நவம்பர் மாதம் 19 ஆம் தேதியான இன்றைய (19-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (நவம்பர் 19 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. குடும்ப தலைவரது உடல் நலனில் அக்கறை வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். யாரையும் விமர்சிக்க கூடாது.

ரிஷபம்: அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்று எண்ணம் மேலோங்கும். தந்தையாரது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நன்மைகள் அதிகம் நடக்கும்.

மிதுனம்: தைரியம் அதிகரிக்கும் நாள். அரசு வழி காரியங்கள் அற்புதமாக முடியும். தந்தை வழி வர்க்கத்தினரால் நன்மை உண்டு. சொத்து வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டு. உடல் நல தொல்லை இருக்கும்.

கடகம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தன லாபம் உண்டு. பிள்ளைகளால் வாழ்க்கையில் முன்னேற்றமான செய்திகள் தேடி வரும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். குல தெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சிம்மம்: வெற்றிகரமான நாள். உயர் பதவி கிடைக்கும். அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்றங்கள் உண்டு. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மாடி வீட்டில் குடி இருப்பவர்களது வீடுகளில் பழுது ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்படும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: மாலை வரை அமைதியாக இருக்க வேண்டும். முக்கியமான தகவல் வரும். தேவையான பொருள் வரவு உண்டு.

துலாம்: ஏராளமான நன்மைகள் உருவாகும். மன தைரியம் அதிகரிக்கும். சகோதர வழி நல்ல செய்தி வரும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். மனைவி வழியில் சொத்து சுகம் சேரும். தன வரவு உண்டு. உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

விருச்சிகம்: உடல் நலனில் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அனைவரிடமும் கவனமாக பழக வேண்டும். காது வழி தொந்தரவுகள் வரும்.

தனுசு: இறைவனது அனுக்கிரகம் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். உங்களது முடிவுகளால் குடும்பம் உயர்வு நிலைக்கு வரும். நல்ல தன லாபம் உண்டு. தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

மகரம்: வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல் நலனில் அக்கறை வேண்டும். தன லாபம் உண்டு. அம்மாவின் உடல் நிலையில் கவனம் வேண்டும். மருத்துவ செலவு உண்டு.

கும்பம்: இனிமையான நாள். வீடு, மனை வாசல் அமைப்பு உண்டு. பிள்ளைகளால் நன்மை உண்டு. படிப்பில் அதிக கவனம் வேண்டும். மார்பக நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

மீனம்: எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். எழுத்தாளர்கள், பேச்சார்கள் புகழ் பெறுவார்கள். உங்களது வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்சனை வரலாம்.