தடை வந்தால் கவலை கூடாது, தேவையான கடனுதவி கிடைக்கும்!

46

தடை வந்தால் கவலை கூடாது, தேவையான கடனுதவி கிடைக்கும்!

ஜூன் 13 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (13-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அற்புதமான நாள். துர்க்கையை வழிபட வேண்டும். எல்லா கஷ்டங்களும் விலகும். யாரையும் விமர்சிக்க கூடாது. குடும்ப வாழ்க்கையில் சுப செய்திகள் தேடி வரும். உடம்பில் அசதி இருக்கும். வியாபார விருத்தி உண்டு. கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: அற்புதமான நாள். சுப செய்திகள் தேடி வரும். கல்யாணத்திற்கு இளைஞர்கள் தயாராகும் நாள். பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். புரோமோஷன் கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மிதுனம்: மிக மிக யோகமான நாள். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். செயற்கரிய காரியங்களை செய்வீர்கள். நோக்கம் நிறைவேறும். சாதனை புரிவீர்கள். தேவையான பண வருமானம் இருக்கும்.

கடகம்: யோகமான நாள். மனதில் உள்ள கவலைகள் எல்லாம் மறையும். மனம் மகிழ்வீர்கள். அழகுப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் கூடும்.

சிம்மம்: இனிய நாள். மாறுதல் இருக்கும். தாயாரது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். மருத்துவமனை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். நிச்சயதார்த்தம் ஆகி ஏப்ரலுக்குப் பிறகு திருமணம் நடக்கும். உயர் அதிகாரிகளுடன் மோதல் கூடாது.

கன்னி: நன்மைகள் அதிகம் நடக்கும். மனதில் நினப்பது ஒன்று நடப்பது ஒன்று என்று இருக்கும். நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: அருமையான நாள். தன வருமானம் வரும். வேலையின் மூலம் வருமானம் வரும். நல்ல குழந்தை பாக்கியம் கிட்டும். பிஸினஸில் கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. கடன் வாங்குவதற்கு அஞ்ச வேண்டும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பேச்சில் மயங்குவார்கள். சுப காரியங்கள் கூடி வரும். உயர் பதவி கிடைக்கும்.

தனுசு: விபரீத ராஜயோகம் உண்டு. தடை வந்தாலும் கவலை படக் கூடாது. தேவையான கடனுதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் அன்னியோன்யம் நிலவும். வியாபாரிகளுக்கு நல்ல நாள். ஆர்ப்பரிக்கும் எண்ணம் தோன்றும்.

மகரம்: கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். எல்லா முன்னேற்றமும் உண்டு. ஆடம்பரம் நோக்கி மனசு செல்லும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. பெண்களுக்கு ரொம்ப நல்ல நாள். அன்பு நிலவும்.

கும்பம்: இந்த நாள் இனிய நாள். நல்ல வேலை கிடைக்கும். ஆண்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் அன்பு, ஆதரவு கிடைக்கும். நிறைய செலவினால் மகிழ்ச்சி உண்டாகும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.

மீனம்: வாழ்வு வெல்லும் அற்புதமான நாள். குல தெய்வத்தின் அருளாசி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வியப்பூட்டும் செய்திகள் கூடி வரும். வியாரிகளுக்கு நல்லது நடக்கும்.