தந்தையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்!

79

தந்தையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் கடக ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசிப்பலன்…

கடக ராசி நேயர்களே சூரிய பகவானும், புதன் பகவானும் இந்த மாதத்திலேயே சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள். உங்களது நல் எண்ணத்தை வெற்றியடைச் செய்கிற ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் அமையும். ராசிக்கு அதிபதியாக இருக்கக் கூடிய சந்திர பகவான் 10 ஆம் இடத்திலேயே அமர்ந்து இந்த மாதம் தொடங்குகிறது.

ராசிநாதன் சந்திரபகவான் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் இந்த மாதம் நல்ல வேலை வாய்ப்பு அமையும். வாழ்க்கையில் வளர்ச்சி விறுவிறுப்பாக அமையும் ஒரு காலகட்டம். தேங்கிக் கிடந்த சூழல் மாறி வளர்ச்சி விறுவிறுப்பாக இருக்கும். உங்களது சிந்தனையில் வேகவேகமான ஒரு வளர்ச்சி இருக்கும். உறுதியான வருமானத்திற்கு சூரிய பகவான் வழிகாட்டப் போகிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை இந்த மாதம் கடக ராசிக்காரர்கள் புரிந்து கொள்வார்கள்.

மேலும் படிக்க: கடக ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 வீடியோ தொகுப்பு!

தந்தை வழியிலிருந்து மிகப்பெரிய ஆறுதல், உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் வார்த்தை உங்களை பக்குவப்படுத்துவதாக அமையும். ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரகள். அதன் மூலம் நல்ல வருமானம் வரும். கல்வியில் சிறந்த உண்டாகும்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நடைபாதை வியாபாரிகளுக்கு இந்த மாத இறுதியில் நல்ல லாபம் வரும். கடக ராசியில் பிறந்த அனைத்து வியாபாரிகளுக்கும் இந்த மாதக் கடைசியில் நல்ல லாபம் வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து, அதன் மூலம் நல்ல வருமானம் அமையும். இளைஞர்கள் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீடு கட்டுவதற்காக கடன் வாங்கும் சூழல் வரும். மனைவி வழியில் சொத்துக்கள் வந்து சேரும். குழந்தை பேறுக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த மாதம் செவ்வாய் கிழமை தோறும் விநாயகப் பெருமானை அருகம்புல் கொண்டு வழிபட்டு வர குழந்தை பாக்கியத்தை உருவாக்கித் தரும். வண்டி, வாகங்களை பராமரித்து அதன் பிறகு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனம் தொடர்பான செலவுகள் இந்த மாதம் இருக்கும். மூத்தவர்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. மருத்துவ செலவு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளின் உடல் நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

அக்கம், பக்கத்தில் பாதுகாப்பாக பழக வேண்டும். நோய்த் தொற்று உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாதம் வழிபட வேண்டிய தெய்வம் தையல் நாயகி. ஓம் தையல் நாயகியே போற்றி என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் உங்களது வாழ்க்கையில் எல்லா வகையிலும் இருந்து முன்னேற்றங்கள், வெற்றிகள் வரும்.