தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும், காதல் வயப்படுவீர்கள்!

22

தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும், காதல் வயப்படுவீர்கள்!

ஜூன் 23 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (23-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: முதலீடு தொடர்பாக எண்ணம் மேலோங்கும். மனதில் நெருக்கடி இருக்கும். இனம் புரியாத கவலை, பயம் இருக்கும். தோல் வலி, கழுத்து வலி தெரியலாம்.

ரிஷபம்: அலுவலக சூழல் இதமாக இருக்கும். இடமாற்றம் உண்டாகும். மனம் விட்டு பேசுவீர்கள். மன அழுத்தம் குறையும். நட்பினால் நன்மை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தை நிகழும்.

மிதுனம்: இனிமையான நாள். எண்ணிய எண்ணங்கள் எண்ணியபடி வெற்றி பெறும். பெரும் செல்வத்தை தரும். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். ஆகச்சிறந்த வெற்றிகளை தருவார். தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: பெரியவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். தொட்டது துலங்கும் நாள். காது வலி தென்படும். தொண்டைப் பகுதியில் பிரச்சனை இருக்கும்.

சிம்மம்: தடைகள் விலகும். வெளிநாட்டு செய்தி வரும். எதிர்பார்க்கும் நற்செய்தி தேடி வரும். போதைப்பழக்கத்திற்கு ஆளாக நேரிடும். கவனம் தேவை. நல்ல வரன் அமையும். வேலை கிடைக்கும்.

கன்னி: நண்பகல் பொழுது நல்ல பொழுதாக இருக்கும். பணவிஷயத்தில் வெற்றி உண்டாகும். மதிப்பு, மரியாதை உயரும். நிலங்கள் வாங்கும் யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி வழி சொந்தங்களால் நன்மை உண்டாகும். திருமண வரன் அமையும். இசைப்பிரியர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மங்கள் நிகழ்ச்சிகளில் மனம் ஈடுபடும். சமையல் பொறுப்பு ஏற்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கூடி வரும். மங்கள செய்தி தேடி வரும். வெளிநாட்டு யோகம் உண்டாகும்.

விருச்சிகம்: ஏராளமான நன்மைகள் உண்டாகும். திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபட வேண்டும். மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஞானியரை வழிபட வேண்டும். குருமார்களின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும்.

தனுசு: யோகமான நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். காதல் வயப்படும் நாள். அதனால், மகிழ்ச்சியடைவீர்கள். கண் தொடர்பான பிரச்சனை வரும். தவறான மெயில், மெசேஜ் உங்களை திசை திருப்பும்.

மகரம்: தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு. மிகப்பெரிய வெற்றிகள் உண்டு. கல்வித்தடைகள் விலகும் அற்புதமான நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: குரு மங்கள யோகம் உண்டு. வாழ்க்கைத் தடைகள் விலகும் அற்புதமான நாள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும்.

மீனம்: இந்நாள் நன்னாள். சுபகாரிய செய்திகள் கூடி வரும். பேச்சில் வேகம் பிறக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கை பிரச்சனை தீர நீதிபதிகள் நல்ல தீர்ப்புகள் வழங்குவார்கள்.