தனுசு ராசிக்காரர்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை முடிப்பீர்கள்!

38

நீங்க தனுசு ராசியா இருந்தால் கட்ட பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை முடிப்பீர்கள்!

ஜூலை 25 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (25-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: இன்று அதிகமாக படித்தால் அறிவு வளரும். வாழ்க்கை நலன்கள் வரும். பதவி மாற்றங்கள் வந்து சேரும். தாய்மை பேறு கிடைக்கும். வம்பு, வழக்குகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்: குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு வரும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். சுப காரியங்கள் நடக்கும். உடலில் அடிபடுவதற்கு வாய்ப்பு உண்டு. உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். மாணவர்களுக்கு அற்புதமான நாள். வியாபாரிகளுக்கு பேச்சுவார்த்தை சிறப்பாக அமையும். அலுவலக சூழல் அருமையாக அமையும்.

மிதுனம்: இறைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. விநாயகப் பெருமான் அனுக்கிரகம் உண்டு. வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

கடகம்: குடும்ப வாழ்க்கையில் முக்கியத்துவம் தர வேண்டும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்: வெற்றிகரமான நாள். வெளிநாட்டு வேலை கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் புரமோஷன் கிடைக்கும். தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும். சாப்பாட்டில் இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

கன்னி: கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் அமைதியாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் கூடுதல் கவனம் தேவை. வாக்கு, வாதங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பிற்பகல் நேரம் அருமையான நாள். காலைப் பொழுதில் முருகப் பெருமானை வழிபட வேண்டும். சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை சொல்ல வேண்டும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். அபூர்வமான வெற்றிகள் வந்து சேரும்.

விருச்சிகம்: சிறந்த நாள். காலைப்பொழுது அருமையாக இருக்கும். வண்டி, வாகன்ங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாலையில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு. வாய்வு தொந்தரவு வரலாம், வயிறு தொடர்பான பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு. பண விவகாரங்கள் வெற்றி தரும்.

தனுசு: உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். கட்ட பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை முடிப்பீர்கள். அரசு ஊழியர்களை பகைத்துக் கொள்ள கூடாது. உயர் அதிகாரிகளுடன் சமரசமாக செல்ல வேண்டும்.

மகரம்: மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பிஸினஸ் பார்ட்னர்ஸையும் அனுசரித்து செல்ல வேண்டும். தங்க நகையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை குழப்புவார்கள். அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். வீடு, மனை வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம்: மிக மிக அதிர்ஷ்டமான ஒரு நாள். மகாலட்சுமியின் அனுக்கிரகம் உண்டு. வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் தேவை. கடனுதவி கிடைக்கும். வாய்வு தொந்தரவு வரலாம். வயிற்று உபாதைகள் தென்படலாம்.

மீனம்: வெற்றிகள் நிறைந்த ஒரு நாள். பேச்சில் மட்டும் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். முருகப் பெருமான் வழிபாடு வெற்றி தரும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் சரியாக செய்து முடிப்பீர்கள்.