தனுசு ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

45

தனுசு ராசி: அக்டோபர் மாத ராசி பலன்!

சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் அக்டோபர் மாதத்திற்கான 12 ராசிகளுக்கான ராசி பலன்….

தனுசு ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் 2021….

தனுசு ராசிக்காரர்கள் 1, 2, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். தெளிவான ஒரு மாதம். எதையும் யோசித்து செய்வது நல்லது. வேலை வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு பயணம் நன்மை தரும். மனக்கவலை தீரும். தடுமாற்றங்கள் நீங்கும். இருந்தாலும், ஏதோ ஒன்றை பரிகொடுத்த ஒரு பதற்றம் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க: தனுசு ராசிக்கான அக்டோபர் மாத ராசி பலன் – வீடியோ!

எதிலும் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் செயல்பட்டால் சகல காரியத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வார். ஒரு சில கிரகத்தின் பின்னடைவு காரணமாக கவனமாக இருக்க வேண்டும். வரும் சரவஸ்வதி பூஜையை முன்னிட்டு, அன்றைய நாளில் சரஸ்வதி தேவியை வழிபட குழந்தைக்கு கல்வி பாக்கியம் அதிகரிக்கும். 15ஆம் தேதி முப்பெரும் தேவிகளான சரஸ்வதி தேவி, பார்வதி தேவி மற்றும் மகாலட்சுமி தேவியை வழிபட வேண்டும்.

இந்த மாதம் கிரகங்களின் சுழற்சி சற்று பின்னடைவை தருவதால், 100க்கு 56 சதவிகித நற்பலன்கள் மட்டுமே தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. எதிலும், நிதானமும், கவனமாகவும், இறை வழிபாடும் இருந்தால், இந்த மாதத்தை எளிதில் கடந்துவிடலாம்.

https://www.youtube.com/watch?v=HEOVynY1ueo