தனுசு ராசி ஐப்பசி மாத ராசி பலன்!

28

தனுசு ராசி ஐப்பசி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் தமிழ் மாத ராசி பலன் 2021

சைதை ராஜாவின் தனுசு ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன் 2021

ஐப்பசி மாத ராசி பலன் தனுசு 2021….

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் லட்சுமி கடாட்சம் நிறைந்த மாதம். கௌரம், செல்வம், செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய ஒரு அமைப்பு. பல வகைகளில் இருந்து பணம் வந்து சேரும் ஒரு அமைப்பு. பணத்தைப் பற்றி கவலையே இல்லை. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

மேலும் படிக்க: தனுசு ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

பொருளாதார மேன்மை, குடும்ப மேன்மை இருப்பதால், கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷமான சூழல் நிலவும். சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும், மரியாதையும் கண்டிப்பாக கிடைக்கும். வண்டி, வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு.அதனால், செலவு அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

படிக்கும், மாணவ, மாணவிகள் படிப்பில் அக்கறை எடுத்து படித்தால் தான் முன்னேற முடியும். அசையா சொத்துக்கள் மூலமாக வருமானம் கிடைக்கும். பூர்வீக வீட்டை பழுதுபார்க்கும் யோகம், அல்லது பூர்வீக நிலத்தில் வீடு கட்டும் யோகம் இருக்கிறது. இதனால், அடிக்கடி பூர்வீக வீட்டிற்கு சென்று வருவீர்கள். ஆலயத்திற்கு நன்கொடை கொடுத்து மகிழ்வீர்கள்.

குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கப் பெறுவீர்கள். ரிஷிகள், முனிவர்கள், குருமார்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். நிதி நிலை உயரும். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் நிலை வரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். கடன் பிரச்சனையே இருக்காது. கடன் இல்லையென்றால் சிறிதளவு கடன் வாங்கிக் கொள்ளுங்கள். சொந்த தொழில் புரியும் அன்பர்களுக்கு நம்பிக்கைக்குரிய வகையில் பணியாளர்கள் அமைவார்கள்.

வாழ்க்கைத் துணை வழியால் ஆதரவு, சந்தோஷம், மன நிம்மதி இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வராக் கடன் வசூலாகும். பண வரவு, பொருள் வரவு, ஆதாயம், பரஸ்பர ஒற்றுமை, சந்தோஷம் நிச்சயமாக ஏற்படும். தந்தையின் உடல் நிலை பாதிக்கப்படலாம். இல்லையென்றால் தந்தைக்கு சமுதாயத்தில் ஒரு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.

ஏதாவது ஒரு பிரச்சனை, சங்கடங்கள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. அரசு, தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஐப்பசி 10, 11, 12 ஆகிய தேதிகள் சந்திராஷ்டமம் என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முருகப் பெருமானை வணங்கி, ஈஸ்வரை போற்ற வேண்டும். மொத்தத்தில் தனுசு ராசிக்கு இந்த ஐப்பசி மாதம் ஒரு அற்புதமான மாதமாக திகழ்கிறது. https://www.youtube.com/watch?v=tdZHwcW7B5U&t=6486s