தர்ம சிந்தனை பெருகும்!

80

தர்ம சிந்தனை பெருகும்!

அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியான இன்றைய (02-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 02 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு… https://www.youtube.com/watch?v=U5f8ULHeqgs

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: மன மகிழ்ச்சியான நாள். இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும் ஒரு நாள். வியாபாரம் செழிக்கும். தர்ம சிந்தனை பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கும்பம்: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தன லாபம் உண்டு. தொட்டது துலங்கும் ஒரு அற்புதமான நாள்.

மகரம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் ஒரு நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நல்ல வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகள் வரும். கல்வி நிலை உயரும். குடும்ப பிரச்சனைகள் விலகும்.

தனுசு: மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தாயாரது உடல் நலனில் அக்கறை காட்டலாம். மனதை உறுதியாக வைத்துக் கொண்டால் இந்த நாள் நல்ல நாள். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். திருமணம் பற்றி சுபச் செய்திகள் வரும். எங்கும், யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

விருச்சிகம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கல்வி நிலை உயரும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

துலாம்: எண்ணிய காரியங்கள் எண்ணியபடி முடியும் நல்லதொரு நாள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நாள். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும் நாள். உடல் நலக் குறைகள் இருக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். விருப்பங்கள் நிறைவேற ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்ட வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: அமைதியான முறையில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். நற்பெயர் உண்டாகும். தன லாபம் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சிம்மம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நல்லதொரு நாள். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். தன லாபம் உண்டு. தொட்டது துலங்கும். அனுகூலமான நாள்.

கடகம்: உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பரபரப்பு, பதற்றம் இருந்து கொண்டு இருக்கும். வியாபாரம் நலம் பெரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வி நிலை உயரும்.

மிதுனம்: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். தன லாபம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி கூடும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். தேக ஆரோக்கியம் பெருகும். பிறரைப் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: பொருள் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரம் சிறக்கும். கால் பாதங்களில் எரிச்சல் வரலாம். சர்க்கரை வியாதி பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். பகைவர்களால் ஏற்பட்ட துன்பங்கள் விலகும்.

மேஷம்: அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறக்கூடிய நாள். வியாபாரிகளுக்கு பண உதவி கிடைக்கும். கண், காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும்.