தானம், தர்மம் செய்தால் நல்லா இருப்பீங்க: தனுசு!

93

தானம், தர்மம் செய்தால் நல்லா இருப்பீங்க: தனுசு!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 10 இன்றைய நாளுக்கான ராசி பலன்….

மேஷம்:

திருமண வரன் வந்து கொண்டிருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் துவங்கும். தன லாபம் உண்டாகும். எதிர்பார்க்கும் நன்மைகள் தேடி வரும்.

ரிஷபம்:

வாகன வாங்கும் யோகம் உண்டு. வண்டி நம்பர் சரியாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு வெற்றியைத் தேடி தரும்.

மிதுனம்:

மனைவி, கணவன் வழி உறவினர்களை அரவணைத்து செல்ல வேண்டும். வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். கல்வியில் அமோகமான முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.

கடகம்:

நல்ல தன லாபம், வியாபார லாபம், குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருப்பது, நல்ல வாய்ப்பு தேடி வரும் என்று அனைத்தும் நன்றாக இருக்கும். கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம்:

தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நன்மைகள் நடைபெறும் நாள். தன லாபம் உண்டு. எதிர்பார்க்கும் அனுகூலமான தகவல் வந்து சேரும்.

கன்னி:

கிருஷ்ணர் வழிபாடு சிறந்தது. எதிர்பார்க்கும் வேலை கிடைக்கும். பதவி மாற்றம், இடமாற்றம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் இனிதாக அமையும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்:

அருமையான நாள். வியாபாரத்தில் வளர்ச்சி. கல்வியில் முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதி என்று இருக்கும். தன லாபம் உண்டு. தான, தர்மங்கள் செய்வது நல்லது.

விருச்சிகம்:

நல்ல வேலை வாய்ப்பு உருவாகும். அனுகூலமான நாள். வெற்றிகள் கை கூடி வரும்.

தனுசு:

முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்ககூடிய நாள். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிறைய தான தர்மங்கள் இன்று செய்யுங்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள். உடல் நலனில் அக்கறை தேவை. எதிர்பார்க்கும் அனுகூலமான செய்தி தேடி வரும்.

மகரம்:

எங்கும் எதிலும் கவனமாக இருந்தால் நன்மையாக இருக்கும். வண்டி, வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கணவன் – மனைவியாக இருந்தால் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் – வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம்:

நல்ல நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தாயார் வழி அன்பு சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவி வழி உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

மீனம்:

உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் தொழில் ரகசியத்தை வெளியில் சொல்லக் கூடாது. கடன் உதவிகள் கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடி வரும்.