தான தர்மங்கள் செய்ய வேண்டும்: விலங்குகளை நேசிக்க வேண்டும்!

94

தான தர்மங்கள் செய்ய வேண்டும்: விலங்குகளை நேசிக்க வேண்டும்!

டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியான இன்றைய (20-12-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (டிசம்பர் 20 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: வியாபாரிகளுக்கு அற்புதமான நாள். பணப்பிரச்சனை தீரும். கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு நன்மைகள் உண்டாகும். பண உதவி கிடைக்கும். வெற்றி மீது வெற்றி சேரும். https://www.youtube.com/watch?v=pFUodXQqf8g

ரிஷபம்: மனமகிழ்ச்சி கூடும். வேலை வாய்ப்பு கிடைக்கும். கால் பகுதிகளில் பிரச்சனை வரலாம். அலுவலகத்தில் இருந்த பிரச்சனை தீரும். சகல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: செயல்களிலும், பேசும் வார்த்தைகளிலும் கவனம் வேண்டும். நக்கலாக பேசக் கூடாது. வாய்ப்புண், நாக்கில் புண், தொண்டைப் புண் வருவதற்கு வாய்ப்பு உண்டு. வேலை வாய்ப்பு உண்டாகும்.

கடகம்: அற்புதமான நாள். வேலை வாய்ப்புக்கு முயற்சித்தால் கிடைக்கும். வேலை மாற்றம் உண்டாகும். உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்: நண்பர்களால் நன்மை உண்டாகும். வாஸ்து கோளாறு இருக்கும். நன்மைகள் அதிகம் நடக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: வேலை வாய்ப்பு வரும். சுய பெருமை பேசக் கூடாது. யாரிடமும் பதவியை சொல்லி பெருமை பேசக் கூடாது. எதிர்பார்க்கும் வேலை கிடைக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும்.

துலாம்: சந்தோஷமான நாள். தர்மம் செய்ய வேண்டும். வியாபாரத்தில் தெளிவு பிறக்கும். வரவுகள் பெருகும். பயணங்களினால் நன்மை உண்டு. குழந்தை பாக்கியம் உண்டாகும்.

விருச்சிகம்: கவனமாக பேச வேண்டும். அதிகப்படியான பேச்சை தவிர்க்க வேண்டும். புதிய சொத்துக்கள் வாங்க கூடாது. வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி பெறும். தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். https://www.youtube.com/watch?v=infJW8QRX0s

தனுசு: பிறருக்கு உதவி செய்ய வேண்டும். தான தர்மங்கள் செய்ய வேண்டும். விலங்குகளுக்கு உதவி செய்ய வேண்டும். நேசிக்க வேண்டும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த தொந்தரவு நீங்கும்.

மகரம்: தகவல் தொடர்பில் தடைகள் வரலாம். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. வம்பு, வழக்குகளை தவிர்க்க வேண்டும். http://youtube.com/watch?v=HH_UiWTPDJQ

கும்பம்: நல்ல நாள். வேலை பார்க்கும் இடங்களில் சிக்கல் இருக்கும். பொறுமையாக செல்ல வேண்டும். வேலையை விடக்கூடாது. வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டு. வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

மீனம்: கழுத்துப் பகுதியில் பிரச்சனை இருக்கும். கடனுதவி கிடைக்கும். தன வரவு பெருகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரத்தில் நம்பிக்கைத் துரோகம் நடக்க வாய்ப்புண்டு.