தாம்பத்ய உறவில் பிரச்சனை வரும்!

75

தாம்பத்ய உறவில் பிரச்சனை வரும்!

செப்டம்பர் 14 ஆம் தேதியான இன்றைய (14-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 14 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சந்தோஷமான அனுபவங்கள் பெருகும் நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும். எந்த பிரச்சனைகள் பற்றியும் இன்று பேசக் கூடாது. எதிலும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு ஏற்றுமதி தொழில் நன்றாகவே நடக்கும். பெண்கள், சமூகவலைதளத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

கும்பம்: எதையும் யோசித்து செயல்படுவீர்கள். வருமானம் வந்தாலும் மனதில் கஷ்டம் இருந்து கொண்டே இருக்கிறது. ராகவேந்திரரை வழிபட வேண்டும். எதிரிகளை வெல்லும் அமைப்பு உண்டு.

மகரம்: எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்ளும் உங்களுக்கு அதனை பின்பற்ற தெரியவில்லை. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பணச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

தனுசு: மென்மேலும் வெற்றிகள் பெருகும் நல்லதொரு நாள். உடல் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். படபடப்பு இருக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். புதிதாக வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு அலுவலகம், வெளியுலகத்தில் இருந்த தொந்தரவுகள் அனைத்தும் நீங்கும்.

விருச்சிகம்: சந்தோஷம் பெருகும். தொட்ட காரியங்கள் துலங்கும். மனதில் இருந்த சங்கடம் தீரும். மீள்வதற்குரிய நாள். அருகம் புல்லினால் விநாயகரை வழிபட வேண்டும். விநாயகரை வழிபட குடுபத்தில் நிம்மதி, சந்தோஷம், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.

துலாம்: பரபரப்பான நாள். வயதில் மூத்தவர்கள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அலுவலகம், வெளிவட்டாரத்தில் அமைதியாகவே இருக்க வேண்டும். பாதி நன்மைகள் நடைபெறும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: மீடியாத் துறை, எழுத்தாளர்களுக்கு வெற்றி. ஆசிரியர்களுக்கு வெற்றி, மாணவர்களுக்கு, வியாபாரிகளுக்கு வெற்றி. பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். பணம் வருமானம் வரும்.

சிம்மம்: பிள்ளைகள் வழியில் ஆனந்தமான செய்திகள் உண்டு. வியாபாரம் வளர்ச்சியடையும். பெண்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். தாம்பத்ய உறவில் பிரச்சனை இருக்கும். அளவான வெற்றி உண்டு.

கடகம்: காலையில் 10 மணிக்கு மேல் வேலை தேடினால், வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று முயற்சித்தால் கடனுதவி கிடைக்கும். கண்ட கண்ட இடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், உணவே விஷமாகிவிடும். தன வரவு உண்டு.

மிதுனம்: தெய்வ வழிபாடு அவசியம். நிறைய காரியங்கள் வேக வேகமாக நடக்கும். உள்நாட்டு வியாபாரம் நன்றாக நடக்கும். ஏராளமான நன்மைகள் நடக்கும். எங்கும், எதிலும் புகழ் பெறுவீர்கள்.

ரிஷபம்: எந்த செயலையும் கவனமாக செய்ய வேண்டும். முடிந்தவரை பயணங்களை தவிர்க்க வேண்டும். பெற்ற தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தியானம் செய்ய வேண்டும். வியாபாரம் வளர்ச்சியடையும்.

மேஷம்: 10 மணி வரைக்கும் அமைதியாக இருக்க வேண்டும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தர்ம ஸ்தானம் வலுவடையும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்க்கும் நல்ல செய்தி வந்து சேரும்.

https://www.youtube.com/watch?v=_JRZQhjDxeE