தாய்மாமன் உடல் நிலையில் கவனம் வேண்டும், வியாபாரிகள் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு!

33

தாய்மாமன் உடல் நிலையில் கவனம் வேண்டும், வியாபாரிகள் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு!

ஜூலை 28 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (28-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வசந்தமான நாள். சுகபோகமான வாழ்க்கை. பழைய விஷயங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கும். மூதாதையர்களின் அருளாசி கிடைக்கும் நாள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அரசு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாள். மன தைரியம் பெருகும்.

ரிஷபம்: மிக அருமையான நாள். மன தைரியம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பட்டா, சிட்டாவுக்கு முயற்சித்தால் வெற்றி உண்டு. தந்தை வழி உறவுகளால் நன்மையாக முடியும்.

மிதுனம்: மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அஷ்டமத்து சனி என்பதால், கணவன் மனைவி இருவரும் அடித்துக் கொள்ளும் நிலை வரலாம். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. விநாயகப் பெருமான் அகவல் படிக்க வேண்டும்.

கடகம்: சிறுதூர பயணங்களினால் வெற்றி உண்டு. கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் வேறு கம்பெனிக்கு மாறுவீர்கள். பெண்களுக்கு இடமாற்றம் உண்டாகும். நல்ல வேலை கிடைக்கும். அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: நிறைய செலவுகள் உண்டு. சுப செலவுகளாக மாற்ற வேண்டும். பெற்றோருக்கு செய்ய வேண்டிய ஈம காரியங்களை சரியாக செய்துவிட வேண்டும். கடமையை செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் செலவுகள் உண்டு. மன நலனில் அக்கறை தேவை.

கன்னி: மிக லாபமான நாள். இடமாற்றம் உண்டாகும். வேலை மாற்றமும் கூடுதல் ஊதியத்துடன் கிடைக்கும். தோள்பட்டை வலி வரலாம். வயிற்றுப் பகுதிகளில் பிரச்சனை வரலாம். தாய் தந்தையரின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிக் அருமையான நாள். தர்மம் உங்களை காப்பாற்றும். பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும். மிக மேன்மையான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபார தொடர்பு அமையும். லாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும் அருமையான நாள்.

விருச்சிகம்: மனைவியை அடிக்க கூடாது. கணவன் மனைவி உறவில் அன்பு இருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்து மூத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு: இந்த நாள் அருமையான நாள். இன்று சந்திராஷ்டமம். தாய்மாமன் உடல் நிலையில் அக்கறை வேண்டும். அதோடு, தந்தையின் உடல் நலனிலும் அக்கறை தேவை. அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் பகைத்துக் கொள்ள கூடாது. வியாபாரிகள் ஏமாற்றப்படலாம்.

மகரம்: இந்த நாள், இனிய நாள். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். கல்வி முயற்சி வெற்றி பெறும். சர்க்கரை வியாதி பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா வகையிலும் நல்ல நாள்.

கும்பம்: மிகச்சிறந்த நாள். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் கோபம் இருக்கும். பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். யார் மீதும் கோபத்தை காட்ட கூடாது. கட்டிய மனைவி, கணவன் கூட எதிரியாக மாறுவார்கள். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்.

மீனம்: இந்த நாள் இனிய நாள். அழகை ரசிக்க கூடிய தினம். அன்பை புரிந்து கொள்ள வேண்டிய நாள். நேர்மையான எண்ணங்கள் வெற்றி பெறும் அருமையான நாள். மூதாதையர் வழிபாடு வெற்றி தரும்.