தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள்; மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்!

39

தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள்; மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்!

செப்டம்பர் 28 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (28-09-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு சொத்து, சுகம் வாங்கும் யோகம் கூடும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கிடையில் உள்ள பிரச்சனை தீர மனம்விட்டு பேசுவீர்கள். வேலை வாய்ப்பில் புதிய முயற்சி செய்யலாம். வியாபாரிகளுக்கு அனுகூலமான நாள்.

ரிஷபம்: மிகச்சிறந்த நல்ல நாள். வெளிநாட்டிற்கு முயற்சி செய்யலாம். உடல் நல பிரச்சனைக்கு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ளலாம். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். நல்ல நட்புக்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மிதுனம்: அன்னை துர்க்கையின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். அம்பாளின் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்வீர்கள்.

கடகம்: தாயாரது அன்பு பரிபூரணமாக கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். துர்க்கையை வழிபாடு செய்ய வேண்டும். நவராத்திரி வைபவத்தை கடைபிடித்து துர்க்கையை வழிபட வேண்டும். எல்லா நன்மையும் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும்.

சிம்மம்: அனுகூலமான நாள். யோகமான நாள். வெளிநாட்டு முயற்சிக்கு மேற்கொள்ளலாம். மின் சாதனங்களை கவனமாக இயக்க வேண்டும். எலக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்புக்கு உள்ளாகும். பிஸினஸில் முன்னேற்றம் உண்டு. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி: தன லாபம் உண்டாகும். அம்பாள் வழிபாடு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையில் சந்தோஷம் பெருகும். தந்தையின் ஆலோசனை கிடைக்கும். பூர்வீக சொத்து வந்து சேரும். மூத்த சகோதரர்கள் வந்து உதவி செய்வார்கள். பிரச்சனை தந்த உயர் அதிகாரிகள் மாற்றம் பெறுவார்கள்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிகவும் நல்ல நாள். நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். தாயாரது ஆசிர்வாதம் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேவையான கடனுதவி கிடைக்கும். அன்பு பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு உடல் நலனில் அக்கறை தேவை.

விருச்சிகம்: மிகப்பெரிய அனுகூலம் உண்டாகும். தொலை தூர பயணம் வெற்றி தரும். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். சொத்து சுகம் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்கள் முன்னின்று உதவுவார்கள். எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு: வாழ்க்கைத் துணையிடம் சரணடைந்து செல்ல வேண்டும். கருத்து வேறுபாடு கூடாது. தாய் வழி உறவுகள் முன்னின்று உதவுவார்கள். பொருளாதார நிலை ஏற்றம் பெறும். சகோதரியின் குடும்பத்தில் பிரச்சனை இருப்பதை உணர்வீர்கள். வண்டி, வாகனங்களை பழுது நீக்கி பயன்படுத்த வேண்டும்.

மகரம்: நல்ல நாள். வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். சிலரால் சில மனக்கஷ்டம் நிலவும். தியானம் செய்ய மன அமைதி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உண்டு. அதிகார பதவிகள் கிடைக்கும்.

கும்பம்: அனுகூலமான நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். 2ஆவது திருமண முயற்சியில் அதிக கவனம் தேவை. வாகனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

மீனம்: பொறுமையோடு செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய நாள். தத்து குழந்தைக்கு முயற்சி செய்யலாம். தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. எதிலும் யோசித்து செயல்பட வேண்டும்.