திடீர் திடீரென்று அதிர்ஷ்டம் தேடி வரும்: கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

124

திடீர் திடீரென்று அதிர்ஷ்டம் தேடி வரும்: கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் நவம்பர் 13 ஆம் தேதி மாலை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் கும்பம் ராசி – வீடியோ தொகுப்பு!

கும்பம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….

மிக உயர்வான மனிதர்கள் கும்ப ராசிக்காரர்கள். அமைதியானவர்கள், வாழ்க்கையில் மரியாதையுடனும், வசதியுடனும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். கொள்கையில் உறுதியாக இருக்க கூடியவர்கள். கும்ப ராசியைச் சேர்ந்த பெண் மனைவியாக வருகிறாள் எண்றால், அந்த குடும்பம் உயர்வான இடத்தை அடையும். மந்திரியைப் போன்று நடந்து கொள்வாள். அந்த கும்ப ராசிக்காரர்களுக்கு எப்போதும் குரு பகவான் மிகுந்த நன்மையை தருவார். நல்ல தன லாபம் தரக்கூடியர். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். அலுவலகத்தில் உயர் பதவியை கொண்டு தருவார். பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தி தருவார். https://www.youtube.com/watch?v=95snCit4MoU

இப்படிப்பட்ட குரு பகவான் உங்களது ராசிக்கு ஜென்ம குருவாக வந்து அமர்கிறார். ஜென்ம குரு சீரை குறைப்பார் என்று சொல்வார்கள். ஜென்மத்தில் குரு வரக்கூடிய இந்த காலகட்டத்தில் குரு பகவானுக்கு என்று ஒரு தன்மை உண்டு. முதலில் அந்த தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். சில கிரகங்கள் தான் இருக்கும் இடத்திற்குரிய பலன்களை தருவார்கள். சில கிரகங்கள் தான் பார்க்கும் இடத்திற்குரிய பலன்களை தருவார்கள்.

அப்படி இருக்கும் நிலையில், இந்த குரு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து எந்தெந்த ஸ்தானங்களை பார்க்கிறாரோ அந்த பலன்களை வாரி வழங்குவார். கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜென்ம குரு பெயர்ச்சி தான் இருந்தாலும், குரு பகவானின் பார்வையானது பஞ்சம ஸ்தானத்தை பார்க்கிறது. குரு பகவானுக்கு 5, 7 மற்றும் 9 என்று 3 பார்வைகள் உண்டு. உங்களது ராசிக்கு வரக்கூடிய குரு பகவான் உங்களது 5ஆவது ஸ்தானத்தைப் பார்க்கிறார். https://www.youtube.com/watch?v=95snCit4MoU

உங்களது அதிர்ஷ்ட ஸ்தானத்தின் திறவுகோலாக இந்த குரு பகவான் அமைகிறது. ஒரு மனிதன் வாழ்க்கையில் ஜெயிக்கப் போகிறான், மிகப் பெரிய வெற்றிகளை பெறப் போகிறான் என்பதை கேட்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது அல்லவா, அதனை அனுபவித்தால் எப்படி இருக்கும். அது போன்று தான் கும்ப ராசிக்காரர்களுக்கு அமையப் போகிறது. https://www.youtube.com/watch?v=95snCit4MoU

வாழ்க்கையில் என்னென்ன அதிர்ஷ்டங்கள் இருக்கிறதோ, அந்த அத்தனை அதிர்ஷ்டங்களும் இந்த குரு பெயர்ச்சியில் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. என்ன முயற்சி செய்தாலும் வெற்றி கிடைக்கும். எப்படி, என்ன நினைத்தாலும், அப்படியே, அது நடந்து முடியும். உங்களது பிள்ளைகள் வாழ்க்கையில் ஜெயித்து வருவார்கள். உங்களது மகன், மகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் கூடி வரும். பேரன் பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் தேடி வரும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தன லாபம் வரும். திடீர் திடீரென்று அதிர்ஷ்டம் தேடி வரும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செய்யும் வியாபாரத்தில் இருந்த நலிவு விலகும். வியாபாரம் புதிய அதிர்ஷ்டத்தை உண்டாக்கித் தரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள் நீங்கும். வாழ்க்கைத் துணைக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உடல் உபாதைகள் எல்லாம் சரியாகும். பண இழப்பு சரியாகும். தங்க நகை, வைர நகை, திருமணம், வீட்டு பராமரிப்பு என்று நீங்கள் செய்யும் செலவு சுபச் செலவாக இருக்கும்.

வெளிநாட்டு வியாபார தொடர்பு விரிவடையும். வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இருந்த பிரச்சனை சரியாகும். சொத்து சுகம் வந்து சேரும். https://www.youtube.com/watch?v=95snCit4MoU