தியானம் செய்தால் நன்மைகள் உண்டு!

64

தியானம் செய்தால் நன்மைகள் உண்டு!

அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியான இன்றைய (31-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 31 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: இந்த நாள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் நன்மைகள் உண்டு. வரவுகள் பெருகும். வண்டி வாகனங்களில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். https://www.youtube.com/watch?v=d1W_eTyQSRo

கும்பம்: அருமையான நாள். வெற்றிக்கான ஒரு முக்கியமான நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் சேரும். செய்யும் செயலில் புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். மற்றவர்களை சனுசரித்து செல்ல வேண்டும்.

மகரம்: இனிமையான நாள். பொறுமையாக இருக்க வேண்டும். கோபம் வேண்டாம். வண்டி, வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

தனுசு: எல்லா நன்மைகளும் உண்டு. வேலை வாய்ப்பு உண்டு. எதிர்பார்க்கும் அனுகூலமான தகவல் உண்டு. பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. தன வரவு வரும்.

விருச்சிகம்: அனுகூலமான தகவல் வரும். குடும்ப நலன் கருதி எடுக்கும் முடிவுகள் வெற்றி பெறும். உடல் நலனில் எச்சரிக்கை தேவை. புதிய ஆடை வாங்கும் யோகம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: தொலைதூரத்திலிருந்து எதிர்பார்க்கும் அனுகூலமான தகவல் வந்து சேரும். படிப்பில் முன்னேற்றம் உண்டு. வெளிநாட்டு யோகம் உண்டு. வயிறு வலி பிரச்சனை வரலாம். தன வரவு உண்டு. வியாபாரிகளுக்கு அருமையான நாள்.

கன்னி: தியானம் செய்தால் நன்மைகள் பெருகும். உடலில் தேவையான சூடு அதிகமாக இருப்பதால் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரம் நன்றாக இருக்கும். தன லாபம் அதிகரிக்கும். பூமி யோகம் உண்டு. https://www.youtube.com/watch?v=d1W_eTyQSRo

சிம்மம்: பதற்றம், படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தன வரவு உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம்: மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். அழகையும், இளமையையும் மேம்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்களால் நல்ல செய்தி உண்டு. தலைவலி பிரச்சனை வரலாம். சிந்தனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். தன லாபம் உண்டு.

மிதுனம்: மகிழ்ச்சியான நாள். எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே நடக்கும். பிள்ளைகள் வழியில் ஆனந்தமான செய்தி வரும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மனதில் இருக்கும் கவலைகள் மறையும் நாள். தர்ம காரியங்கள் செய்வதன் மூலமாக இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும். https://www.youtube.com/watch?v=d1W_eTyQSRo

ரிஷபம்: கடனுதவி கிடைக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். பிள்ளைகள் மூலம் ஆனந்தம் பெருகும். செலவுகள் அதிகரிக்கும். தொட்டது துலங்கும் நாள்.

மேஷம்: பொதுமக்கள் தொடர்புடைய துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குடும்ப நலன் கருதி எடுக்கும் முடிவுகள் வெற்றி பெறும்.  செலவுகள் உண்டு. குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.