திருமண நிகழ்ச்சி கூடி வரும்!

34

திருமண நிகழ்ச்சி கூடி வரும்!

நவம்பர் மாதம் 20 ஆம் தேதியான இன்றைய (20-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (நவம்பர் 20ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: சொத்துக்களால் பண வருமானம் வரும். தாய்வழி உறவுகளால் பணம் வரும். நடப்பதெல்லாம் நன்மையாகும். பேச்சுவார்த்தையில் கவனம் வேண்டும்.

ரிஷபம்: செயல்பாடுகளில் நிதானம வேண்டும். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். குடும்ப வாழ்க்கை மேன்மையாகும். அலுவலகத்தில் டென்ஷ்ன் இருக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: பூர்வ, புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். நிறைய செலவுகள் இருக்கும். குரு பார்வை உங்களுக்கு இருக்கிறது. இறைவனின் அருள் கிடைக்கும். எங்கும், எதிலும் அளவாக பேச வேண்டும். யாரையும் விமர்சிக்க கூடாது. தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்.

கடகம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தொட்டது துலங்கும். அலுவலகத்தில் புரோமோஷன் குறித்த முடிவுகள் வெற்றி பெறும். நண்பர்களால் கருத்து வேறுபாடு வரலாம்.

சிம்மம்: வண்டி, வாகனங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும். சகல காரியமும் அனுகூலமாகும். குடும்ப வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: அலங்கரித்துக் கொள்வீர்கள். நகை வாங்கும் எண்ணம் தோன்றும். வரவுகள் பெருகும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தெளிவான முடிவுகளால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்.

துலாம்: தீமை செய்தாலும் நன்மை செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை வேண்டும்.

விருச்சிகம்: நீங்கள் கேட்டது கிடைக்கும். தெய்வ வாக்குகளை நம்ப வேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டும். வேலை கிடைக்கும். பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். தன வரவு உண்டு.

தனுசு: அதிர்ஷ்டகரமான நாள். இறைவனின் அனுக்கிரகம் உண்டு. நன்மைகள் நடக்கும். திருமணம் நிகழ்ச்சி கூடி வரும். மின் சாதனங்களை கவனமாக இயக்க வேண்டும்.

மகரம்: எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி உண்டு. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கும்பம்: இனிமையான நாள். நன்மைகள் அதிகம் நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. புதிய வரவு உண்டு.

மீனம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தைரியம் அதிகரிக்கும். தன வரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்றிணைவார்கள். வேலை வாய்ப்பு கிடைக்கும்.