திருமண பொருத்தம் கவனமாக பார்க்க வேண்டும்: மீன ராசி!

124

திருமண பொருத்தம் கவனமாக பார்க்க வேண்டும்: மீன ராசி!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்….

மேஷம்: அற்புதமான நாள். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்க்கும் செய்தி வந்து சேரும். மூத்த குடிமக்கள் தங்களது உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். திருமணத் தடை நீங்கி, வரன்கள் தேடி வரும். பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பதவிகள் கிடைக்க கூடிய காலகட்டம். அரசியல்வாதிகள் நல்ல, அதிகார பதவிகளை பெறக் கூடிய ஒரு காலம்.

ரிஷபம்: எந்த காரியம் வெற்றி தருமோ அதை மட்டும் செய்ய வேண்டும். உங்களுக்கு நன்மை தரக்கூடியதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும். வம்பு, வழக்கு இருந்தால் அதில் தலையிடக் கூடாது. எதையும் பலமுறை யோசித்து செய்ய வேண்டும். வங்கி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. பயணங்களை தள்ளிப் போடுவது நல்லது. ஆலய திருப்பணிகளில் ஈடுபடுவது நல்லது.

மிதுனம்: அற்புதமான காலகட்டம். நல்லதொரு காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் இளைஞர்கள் வெற்றி பெறக் கூடிய காலம். கல்வி, வியாபாரம் என்று அனைத்துமே நலமாக இருக்கும் ஒரு நாள். சாதிக்க துடித்து சாதனை புரிவீர்கள். குடும்ப மற்றும் பிள்ளைகள் நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கடகம்: புதிதாக தனக்கு வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள், வேலைக்கு முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். மூத்த குடிமக்கள் தங்களது உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவி வழி உறவினர்களால் நன்மைகள் உண்டு. சகோதரர்களால் நன்மைகள் உண்டு. சொத்து, சுகத்தினால் வருமானம் உண்டு. அரசுப் பதவிகள் கிடைக்கும் யோகம் உண்டு. அதிகாரப் பதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு நல்லதொரு நாள்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: அருமையான நாள். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு ஏற்றமான நாள். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியிலே அதிர்ஷ்டவசமான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கன்னி: தொட்ட காரியங்கள் துலங்கும் அற்புதமான நாள். எதிர்பார்க்கும் செய்திகள் தடை தாமதங்களுடன் வந்து சேரும். விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும். சிறுதூர பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. தாயாரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும். உயரதிகாரிகள் உங்களது கோபத்தை தூண்டினாலும் பொறுமை அவசியம்.

துலாம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். பேச்சு சாமர்த்தியம் அதிகரிக்கும். வாக்கு வன்மை பெரும். கோபத்தை மட்டும் குறைத்து கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு மிகுந்த லாபம் வரும். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சில சோதனைகள் இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் உயர்வான நாள்.

விருச்சிகம்: அற்புதமான நாள். இறையருள் பெருகும் நாள். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு தேடினால், கண்டிப்பாக கிடைக்கும் நாள். மூத்த குடிமக்களுக்கு அருமையான நாள். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற நாள். வியாபாரிகளுக்கு வளம் தரும் நாள்.

தனுசு: எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் தேடி வரக் கூடிய ஒரு நல்ல நாள். ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். மூத்த குடிமக்கள் தங்களது உடல் நலனில் கவனம் எடுத்துக்க வேண்டும். நெருக்கடிகள் இருக்கும். விநாயகரை வழிபட வேண்டும். அனுகூல செய்திகள் வரும்.

மகரம்: அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் தேடி வரக் கூடிய நாள். வெளிநாட்டு வாய்ப்புகள் பலருக்கு கூடி வரும். குடும்ப உறவிலே மட்டும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வியாபாரத்திலேயே வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களின் நல்ல வழிகாட்டுதல்களை பெறுவீர்கள்.

கும்பம்: முக்கிய முடிவுகள் எடுப்பதற்குரிய ஒரு நல்ல நாள். எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி பெறக் கூடிய நாள். வேலை வாய்ப்பு வரும். வசதிகள் கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். நல்ல கூட்டாளிகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. பெண்கள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீனம்: திருமண பொருத்தம் பார்ப்பவர்கள் மிக கவனமாக பொருத்தம் பார்க்க வேண்டும். பெண்கள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு கடனுதவி கிடைக்கும். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். தன லாபம் உண்டாகும். வேலையில் உயர்வு, பண உதவியும் கிடைக்கும் நாள்.