திருமண பொருத்தம் பார்ப்பதில் கவனம் தேவை!

26

திருமண பொருத்தம் பார்ப்பதில் கவனம் தேவை!

ஜூலை 03 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (03-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட வேண்டும். தவறான நட்புகள் அமையும். போதை பழக்கத்தில் ஈடுபடுவீர்கள். திருமணம் குறித்து நல்ல செய்தி வரும். வருமானம் உயரும்.

ரிஷபம்: உடல் நலனில் அக்கறை தேவை. திடீர் செலவுகள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டு.

மிதுனம்: நடைபாதை வியாபாரிகளுக்கு லாபம். உண்டு தெய்வ வழிபாட்டில் மனம் ஈடுபட வேண்டும். குடும்ப மகிழ்ச்சி கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

கடகம்: ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன லாபம் வரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. நெஞ்ச நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்: விநாயகரை வழிபட வேண்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

கன்னி: புதிய வாய்ப்புகள் வரும். இடமாற்றம் உண்டு. வேலைமாற்றம் உண்டாகும். கோபம் வரும். படபடப்பு இருக்கும். கண் காது மூக்கு பிரச்சனைக்கு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: உயர் கல்வி யோகம் உண்டு. நல்ல மேன்மைகள் உண்டாகும். தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. வாய்வு தொந்தரவு இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் இனிதாக அமையும்.

விருச்சிகம்: திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

தனுசு: அருமையான நாள். தொட்டது துலங்கும். காரியங்கள் வெற்றிகரமாக அமையும். கல்வி முயற்சி வெற்றி பெறும். விநாயகரை வழிபட வேண்டும். நீண்ட தூர பயணம் வெற்றி தரும்.

மகரம்: உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. வீடு, மனை பிரச்சனைகளை ஒத்தி வைப்பது நல்லது. கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

கும்பம்: இந்த நாள் நல்ல நாள். தெய்வ வழிபாடு வெற்றி தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. ஆறுதல் கிடைக்கும். உடல் நலனில் மட்டும் அக்கறை தேவை.

மீனம்: கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகள் அதிகமாக இருக்கும். பகலில் பக்கம் பார்த்து பேச வேண்டும். உள்ளூர் வியாபாரம் நன்றாக நடக்கும்.