திருவண்ணாமலை கிரிவல முறை மற்றும் அதன் பலன்கள்!
பொதுவாக திருவண்ணாமலை கிரிவலம் என்பது நினைத்த நேரத்தில் நினைத்த பொழுது செய்வதில் எந்த தவறும் இல்லை என்ற போதிலும், ஒருசில நேரங்களுக்கு சிறப்பு பலன்களும் கிடைக்கும். அதே போன்று ஒரு சில கிழமைகளில் சுற்றினால் கிழமைக்குரிய தேவதைகளும் ஒரு சில பலன்களை தருவார்கள் என்று பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மன தைரியம் தரும் சந்திர பகவான் பழங்காலத்தில் திருவண்ணாமலை கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80 கி.மீ). அப்படி வலம் வந்தால் மறு பிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திர பகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மன தைரியத்தை உண்டாக்கும்.
திருவண்ணாமலையை கிரிவலம் செய்யும் கிழமைகளின் பலன்கள்:
- ஞாயிறுக்கிழமை – சிவபதம்.
- திங்கள் கிழமை – உலகாளும் வல்லமை கிட்டும்.
- செவ்வாய்க்கிழமை – கடன், ஏழ்மைகள் விலகி பிறவிப் பிணியில் இருந்து விடுதலை கிட்டும்.
- புதன் – கலைகளில் தேர்ச்சி.
- வியாழக்கிழமை – ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிட்டும்.
- வெள்ளிக்கிழமை – விஷ்ணுபதம் கிட்டும்.
- சனிக்கிழமை – நவக்கிரகங்களை வழிபட்டதன் பலன் கிடைக்கும்.
அனைவரும் கிரி வலம் சென்று எல்லாம் வல்ல ஈசனின் இறை அருள் பெறுக.