துலாம் முதல் மீனம் வரை: செப்டம்பர் மாத ராசி பலன்!

85
துலாம் முதல் மீனம் வரை: செப்டம்பர் மாத ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் செப்டம்பர் மாதத்திற்கான ராசி பலன்களை பார்த்து வருகிறோம். இந்தப் பதிவில், துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான செப்டம்பர் மாத பலன்கள் குறித்து பார்ப்போம்…

துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021….

துலாம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன்:

துலாம் ராசி அன்பர்களே…

துலாம் ராசிக்காரர்கள் வெற்றி வாகை சூடக் கூடிய நல்ல மாதம். எங்கு பொறுமையாக இருக்க வேண்டுமோ அங்கு பொறுமையாக இருப்பார்கள். எங்கு அவசரப் பட வேண்டுமோ அங்கு அவசரப்படுவார்கள். இயல்பான குணம் நிதானம். இந்த குணம் அவர்களை வெற்றி பெற வைக்கிறது. தராசைப் போன்று சராசரியாக இருப்பார்கள். காவல் தெய்வங்களின் துணை உங்களுக்கு கிடைக்கிறது. வெற்றி பெறக் கூடிய நல்ல தருணம், நல்ல மாதம்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் துலாம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021 – வீடியோ தொகுப்பு!

சிக்கலாக இருந்தாலும், அவமானங்களாக இருந்தாலும் காவல் தெய்வங்களின் அனுக்கிரகத்தால் அதெல்லாம் விலகி நல் வழி கிடைக்கும். பிரச்சனை இருந்து நம்மை காப்பாற்றுவதற்கு ஒரு கரம் இருந்தால் அது சந்தோஷம் தான். சுப காரியங்கள் நடக்கும். ஹார்மோன் பிரச்சனை உள்ள பெண்களுக்கு அதற்கு நிவாரணம் கிடைக்கும். கலைத்துறைய சேர்ந்தவர்களுக்கு நல்ல நேரம். பெண்களுக்கு மகத்துவமான காலகட்டம்.

நன்மையும், தீமையும் கலந்து கலந்து வரும். சிலருக்கு பதவி உயர்வு வரும். சிலருக்கு பார்க்கும் வேலையில் பிரச்சனை வரும். அமைதியாக இருக்க வேண்டும். வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளக் கூடாது. முன் கோபம் அதிகமாக இருக்கும். உடல் நலனில் என்ன பிரச்சனை இருந்தாலும் மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்ளலாம். உடனடியாக சரியாகும்.

வாழ்க்கை துணைவருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் வெளிநாட்டிற்கு முயற்சித்தாலும் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்யலாம். தாயாரின் உடல் நலனிலும், உங்களது உடல் நலத்திலும் கவனமாக, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வண்டியில் செல்லும் போது மெதுவாகவும், பொறுமையாகவும் செல்ல வேண்டும். கண் திருஷ்டி பிரச்சனை ஒரு சிலருக்கு வரும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.

வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினால் வெற்றி கிடைக்கும். கார், பைக் வாங்கும் எண்ணம் மேலோங்கும். புதிய ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நல்லது நடக்கும். மீடியா துறையை சேர்ந்தவர்களுக்கு உயர்வு கிடைக்கும். ஒட்டு மொத்தமாக துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்.

விருச்சிக ராசி: செப்டம்பர் மாத ராசி பலன் 2021:

விருச்சிக ராசி அன்பர்களே…

ஜொலிக்கும் நல்லதொரு மாதமாக இந்த மாதம் இருக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வந்து சேரும். அரசு துறையில் இருந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். காவல் துறையில் இருந்தால் பதவி உயர்வு தேடி வரும். விரும்பிய இடத்திற்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. பதவி உயர்வு, நல்ல பொறுப்புகள் தேடி வரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் விருச்சிக ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021

தனியார் துறையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு அந்த பிரச்சனையெல்லாம் நீங்க பெறுவீர்கள். தனியார் துறையை சேர்ந்த இளைஞர்களுக்கு நல்ல உயர்வு தேடி வரும். படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சிறுதூர பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. ஒரு சிலருக்கு தோள்பட்டை பகுதிகளில் வலி ஏற்படும்.

வாய்வு, அடிவயிறு தொந்தரவு, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெளி உணவை தவிர்ப்பது நல்லது. தொழில் முனைவோருக்கு நல்ல தொழிலில் ஒரு உற்சாகமான சூழ்நிலை உண்டு. எதிலும் அவசரப்படக் கூடாது. மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். அதற்கெல்லாம் இடம் கொடுக்க கூடாது.

ஜாதகத்தைப் பார்த்து வேறு இடத்திற்கு மாறும் யோகம் இருந்தால் மாறுங்கள். இல்லையென்றால் பொறுமையாக இருப்பது அவசியம். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அடுத்தர்கள் எவ்வளவு வலிமை வாய்ந்தவன் என்பது பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். வீண் வம்பு, சண்டைகளில் சிக்கக் கூடாது. ஒரு சிலரை வழக்குகளில் கூட சிக்க வைக்கும்.

மூச்சு பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இட மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு இடமாற்றம் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். குழந்தையை தத்தெடுக்கவும் செய்யலாம். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். புகழ் பெறக் கூடிய அமைப்பு விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருக்கிறது. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

பேச்சாளர்கள், எழுத்தாளர்களின் திறமை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் உயரக்கூடிய காலகட்டம். தெளிவான சிந்தனை பிறக்கும். குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். அதில், விட்டுக் கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. தவறான வாழ்க்கையை நோக்கி ஒரு சிலரை இழுக்கும். எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லா முன்னேற்றமும் உருவாக குன்றக்குடி முருகனை வழிபட எல்லா நன்மைகளும் நடக்கும்.

தனுசு ராசி: செப்டம்பர் மாத ராசி பலன் 2021:

தனுசு ராசி அன்பர்களே…

பல மாற்றங்கள் நிகழக் கூடிய ஒரு சூழல் இருக்கிறது. பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்க கூடிய காலகட்டம். தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான நேரம். வரும் 17ஆம் தேதி தர்ம கர்மாதிபதி யோகம் அடையப்போகிறீர்கள். தர்ம காரியங்கள் செய்வதற்கு ஏற்ற சூழல். வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவதற்கும் ஏற்ற மாதம் இது. உங்கள் மீது சொத்து எழுதி வைக்கும் காலம். குடும்பத்து பிரச்சனை முடிவுக்கு வர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்ற காலகட்டம்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் தனுசு ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021!

கோபப் பட்டு எதிர்மறை பேச்சுக்கள் பேசக் கூடாது. எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். யாரேனும் உங்களை திட்டினாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்களது வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறை பேச்சு உங்களுக்கே ஆபத்தாக முடியும். இந்த காலகட்டத்தில் பேச்சில் மட்டும் கவனமாக இருந்தால் வெற்றி பெறுவீர்கள்.

நேற்று வரை நல்ல வேலை அமையவில்லை என்று வருத்தப்படும் அன்பர்களுக்கு அருமையான வேலை அமையும் யோகம் வருகிறது. முன்னோர் வழி பிரச்சனை இருப்பவர்களுக்கு பல விஷயங்களில் தெளிவு வரும். அரசு வழி ஆதரவு கிட்டும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு நீதிமன்றங்கள் நல்வழி காட்டும். நீதிபதிகள் தெய்வங்களாக இருந்து உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் பக்கத்து நியாயத்தை நீதி நிலைநாட்டும்.

சட்ட சிக்கலில், செய்யாத தவறுகளில் சிக்கியவர்கள் தற்போது தப்பித்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். கொடுக்கல், வாங்களில் சிக்கல் ஏற்படும். பணம், தனிமனித வாழ்க்கை, வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் பிரச்சனை என்று அனைத்து இடங்களிலும் இருக்கும் சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

தந்தையார் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இப்பொழுது நீங்கும். வேலை மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு வேலை மாற்றம் குறித்து நல்ல தகவல் வந்து சேரும். பெண் துணை உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரி பெண்ணாக இருந்தால் நன்மை நடக்கும். மூத்த சகோதரியால் நன்மை உண்டாகும். மனைவியால் நல்லது நடக்கும். வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்க கூடிய காலகட்டமாக இந்த மாதம் இருக்கும்.

மகரம் ராசி செப்டம்பர் மாத பலன்:

மகரம் ராசி அன்பர்களே…

எந்த ஒரு விஷயத்திலும் நேர்மையான செயல்பாடு அவசியம். உங்கள் மீது மற்றவர்கள் குறை சொல்ல முடியாதவாறு நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு எல்லா வகையான ஆற்றல்களும் உண்டு. ராசியில் இருக்கும் சனி பகவான் நீதி, நேர்மையை உணர்த்துவார். எப்போதும், சனி பகவானால் நீதி, நேர்மை தவறியவர்களுக்கு மட்டுமே பிரச்சனை உண்டு. நிறைய தர்ம காரியங்கள் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் மகரம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021!

வேலை பார்க்கும் இடங்களில் ஒரு சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். எல்லாமே முள் இல்லாத பாதை, நாம் நடந்து சென்றுவிடலாம் என்பது ஆசை தான். அலுவலகத்தில் உள்ள பிரச்சனையை வாய்விட்டு பேசக் கூடாது. சனி பகவானால் வேலை தொடர்பான பிரச்சனை வரும். வேலை பார்க்கும் இடத்தில் சில முரண்பாடுகளை காட்டும். நாமே வேலையை விட்டு வெளியேறும் சூழல் உருவாகும். இது நம்மை ஆசை காட்டி மோசம் செய்யும் தன்மை. ஆனால், வேலையை மட்டும் விடக் கூடாது.

பெற்றவர்கள் உடல் நலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். தாய், தகப்பன் உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு விடும். சில குடும்பங்களில் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும். வெளிகாட்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு எல்லாம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி நன்றாக அமையும். ஒரு சிலர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலத்தை அதிகப்படுத்திக் கொள்வீர்கள்.

வியாபாரிகள் வியாபாரத்தில் ஜெயிக்க கூடிய காலகட்டம். வியாபாரம் தொடர்பாக நல்ல தகவல்கள் வரும். இந்த மாதம் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கணவன் – மனைவி ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாழ்க்கையில் குடும்பம் தான் அடிப்படை. குடும்பத்தில் அன்பை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கப் போகிறது. வாகன யோகம் வரப்போகிறது. அரசியல்வாதியை பகைத்துக் கொள்ளக் கூடாது. அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. வண்டியில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சுய வேலை வாய்ப்பு செய்யக்கூடியவர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. தெய்வ வழிபாடு பல வழிகளில் நன்மைகளை தரும். இறைவழிபாடு பிடிக்காதவர்கள் தான தர்மங்கள் செய்யுங்கள். பிறருக்கு உதவி செய்தால், உங்களது வாழ்க்கை மட்டுமல்ல உங்களது குடும்ப வாழ்க்கையும் செழிக்கும்.

கும்பம் ராசி செப்டம்பர் மாத பலன்:

கும்பம் ராசி அன்பர்களே…

பொறுமைசாலியாக இருந்தாலும் உங்களது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இடமாற்றம் தரக்கூடிய ஒரு காலகட்டம். சொந்தம், பந்தம், உறவினர்கள் பற்றியும், நம்மைப் பற்றியும் நாம் உணர்ந்து கொள்ளும் ஒரு மாதம். திடீர் செலவுகள் இருக்கும். சுபச் செலவுகளாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல விஷயத்திற்காக செலவு செய்ய வேண்டும். பெரியளவில் செலவு வரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் கும்பம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021!

நிறைய மாற்றங்கள் வாழ்க்கையில் உருவாகும். சிலருக்கு கால் பாதங்களில் பிரச்சனை இருக்கும். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும். குறிப்பாக பழமுதிர் சோலை முருகப் பெருமானை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். கும்ப ராசிக்காரர்களுக்கு பெருமாள் வழிபாடு, முருகன் வழிபாடு எல்லாம் நன்மைகள் உண்டாகும்.

பெண்களுக்கு ஒரு உயர்வான காலகட்டம். அலுவலகத்தில் முன்னேற்றம், புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சமூக வலைதளத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய பதிவுகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வரும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

நீண்ட தூர பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. இந்த காலகட்டத்தில் நிறைய செலவுகள் இருந்தாலும் அதிகளவில் பணம் வரும். அரசுத் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளலாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தவறுகள் செய்தால் இப்பொழுது தண்டனை வந்து சேரும். வயிறு தொடர்பான பிரச்சனை வரும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழலும் இருக்கிறது. ஆகையால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வியாபாரம் தொடர்பாக தவறான நபர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். நெருங்கியவர்கள் கூட நம்பிக்கை துரோகம் செய்யும் அமைப்பு உண்டு. எந்தவொரு முடிவும் ஏமாந்து எடுத்துவிட வேண்டாம். சில நொடிகளில் ஏமாந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். விலையுயர்ந்த ஆபரணங்களில் கூடுதலாக கவனம் செலுத்திக் கொள்ளுங்கள். விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்லும் போது எச்சரியாக இருந்துக்கோங்க.

இருக்கும் வேலையை விட்டு விடாதீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். எந்த வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு என்று வேலை வாய்ப்பு அமையும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படித்தால் வெற்றி உண்டாகும். நல்ல நண்பர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

மீனம் செப்டம்பர் மாத ராசி பலன்:

மீனம் ராசி அன்பர்களே…

குரு பகவானின் பெயர்ச்சி இந்த மாதம் இருக்கிறது. ராசிநாதன் எப்படி இருக்கிறாரோ, அப்படிதான் நமது வாழ்க்கை இருக்கும். எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கும், வாழ்க்கையில் உயர்வதாக இருக்கட்டும் எல்லாமே ராசி சம்பந்தப்பட்டது. பல நன்மைகள் உண்டாகும் மாதம். மகான்களின் வழிபாடு செய்ய வேண்டும். நாம் வாழக்கூடிய காலத்திலேயே வாழ்ந்த அற்புதமான தெய்வம் காஞ்சி மகான். அப்படி பல மகான்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் மீனம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021!

நமக்கு தெரிவதுமில்லை, நாம் வணங்கி வழிபடுவதுமில்லை. ஷீரடி பாபா வழிபடலாம், ராகவேந்திரரை வழிபடலாம். என்ன பிரச்சனை இருந்தாலும் அதற்கு மகான் வழிபாடு வெற்றிகளை பெற்றுத் தரும். புதிய வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யக்கூடியவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். கிடைத்த வேலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருக்கின்ற வேலையை சரியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அரசுத் துறைக்கு முயற்சி செய்வதற்குரிய ஏற்ற காலம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

உள்நாட்டைவிட, வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு கூடுதல் சிறப்பு உண்டு. குடும்ப வாழ்க்கையில் கணவரின் உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தாய்மாமன், சகோதரனுடைய உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். சில மாற்றங்கள் உருவாகும்.

வண்டி வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கை வேண்டும். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும். துர்க்கை அம்மனை வழிபட எல்லா நன்மைகளும் வாழ்க்கையில் கிடைக்கும். ஆபத்து வரும் போது தெய்வம் நம்மை காப்பாற்றும். வியாபாரத்தில் வெளியுலக தொடர்பு விரிவடையும். பெண்களைப் பொறுத்தவரையில் உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சளி தொந்தரவு வரும். மூச்சு பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். பணியில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவது கூடாது. சொந்த வீட்டை வாடகைக்கு விடும் போதும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும். பழைய வீட்டை விற்கும் போதும் சரி, பழைய வீடு வாங்கும் போதும் சரி, பத்திரங்கள் சரியாக இருக்கிறது, வாங்குபவர் எப்படி என்றெல்லாம் தெளிவாக தெரிந்து கொண்டு எதையும் செய்ய வேண்டும். இந்த மாதத்தில் சகல நன்மைகளும் நடக்க வேண்டும் என்றால் துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும்.