தெய்வத்தின் துணை உங்களுக்கு உண்டு!

110

தெய்வத்தின் துணை உங்களுக்கு உண்டு!

ஜூன் 25 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (25-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: தான தர்மங்கள் செய்ய வேண்டும். நிறைய நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் உயரும்.

ரிஷபம்: ராமநாமத்தை சொல்ல வேண்டும். திருப்பதி கோயிலுக்கு சென்று வர வேண்டும். பெருமாளுக்கு உகந்த நாள். அற்புதமான வாழ்க்கை அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: பெருமாளை வழிபட வேண்டும். தனம், செல்வம் சேரும். எல்லோரும் முன்னுக்கு வரும் நாள். தன வருமானம் கூடும். முருகப் பெருமானின் அனுக்கிரகம் உண்டு. வியாபாரத்தில் அரசு உதவி கிடைக்கும்.

கடகம்: நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடங்களில் நெருக்கடி இருக்கும். போராட்ட மனநிலை இருக்கும். இந்த நாள், இனிய நாள். புதிதாக செல்போன் வாங்கும் யோகம் உண்டு. தாயாரது உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

சிம்மம்: மிக அருமையான நாள். வெளிநாட்டு தொடர்பு உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. மிகச்சிறந்த லாபங்கள் உண்டு.

கன்னி: அருளாசி நிறைந்த ஒரு நாள். கல்யாண வரன் அமையும். சகோதரிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். வியாபாரத்தில் வெளியுறவுத் தொடர்பு விரிவடையும்.

விருச்சிகம்: இனிய நாள். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. பரம்பரைத் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. புதிய பதவிகள் கிடைக்கும். கடன் தொல்லைகள் அதிகம் இருக்கும்.

தனுசு: அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். தெய்வ துணை உண்டு. கல்வியில் முன்னேற்றம் உண்டு. வெளிநாட்டு தொடர்பு உண்டு.

மகரம்: நாடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. யாருக்கும் அடங்கி போக கூடாது. தொழில் முயற்சி வெற்றி பெறும். நடைபாதை வியாபாரிகளுக்கு லாபம் உண்டு.

கும்பம்: பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. உழைப்பு அதிகமாக இருக்கும். ஒவ்வாமை பிரச்சனை இருக்கும். நல்ல பதவிகள் கிடைக்கும்.

மீனம்: ஏராளமான நன்மைகள் தேடி வரும் நல்ல நாள். குடும்பத்தில் நல்ல நல்ல தகவல் வந்துசேரும். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கட்டும் யோகம் உண்டு. குடும்பத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.