தேவையான கடனுதவி கிடைக்கும்; எண்ணிய எண்ணங்கள் வெற்றியடையும்!

21

தேவையான கடனுதவி கிடைக்கும்; எண்ணிய எண்ணங்கள் வெற்றியடையும்!

ஆகஸ்ட் 14 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (14-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். ஏராளமான நன்மைகள் நடக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள். வியாபாரத்தில் வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.

ரிஷபம்: கடமையை மிகச்சரியாக செய்ய வேண்டும். தன லாபம் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை பெருகும். மன தைரியம் அதிகரிக்கும். வியாபார ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். புண்ணியம் உங்களை காப்பாற்றும். காசு, பணம் சம்பாதிப்பீர்கள். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். புதிய காரியங்களில் எச்சரிக்கை தேவை. ஆன்மீக விசயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும்.

கடகம்: இறைவழிபாட்டை நெஞ்சகத்திலேயே செய்யலாம். பிறர் மீது அன்பு காட்ட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். தன வருமானம் உயரும். சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

சிம்மம்: நம்பிக்கை வைத்து எந்த செயலை செய்தாலும் வெற்றி உண்டு. காலையில் கவனமாகவும், மாலையில் மௌனமாகவும் இருக்க வேண்டும். எதைப் பேச வேண்டும் என்று அறிந்து பேச வேண்டும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். சம்சார வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் உண்டு.

கன்னி: உடல் நலனில் அக்கறை தேவை. வேலை வாய்ப்பு முயற்சியில் ஈடுபாடு உண்டாகும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. தன லாபம் பெருகும். குடும்ப உறவுகள் உதவி செய்வார்கள். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். தேவையான கடனுதவி கிடைக்கும். வேலை வாய்ப்பு பற்றிய சிந்தனை பெருகும். கருத்து வேறுபாடு உண்டாகும். கால் பகுதியில் பிரச்சனை வரலாம்.

விருச்சிகம்: ஆனந்தமான செய்திகள் உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

தனுசு: எண்ணிய எண்ணங்கள் வெற்றியடையும். மன தைரியம் அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

மகரம்: இந்த நாள் இனிய நாள். தன லாபம் வரும். நகைகள் வாங்கும் யோகம் உண்டு. ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு.

கும்பம்: லாபங்கள் நிறைந்த நாள். கணவன் மனைவி உறவில் சிக்கல் உண்டாகும். இனம் புரியாத கவலை உண்டாகும். குடும்ப உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். இடமாற்றம், வேலை மாற்றம் குறித்த சிந்தனைகள் பெருகும்.

மீனம்: நிறைய வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். அன்பு பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். பொருளாதார ரீதியாக உயர்வு வரும். தோள்பட்டை பகுதியில் வலி வரலாம். முதுகு தண்டுவட பிரச்சனை வரலாம். வாய்வு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். குடும்ப ஒற்றுமை கருதி எடுக்கும் காரியங்கள் வெற்றி பெறும்.