தொண்டை, வயிறு தொடர்பான பிரச்சனை வரலாம்!

57

தொண்டை, வயிறு தொடர்பான பிரச்சனை வரலாம்!

ஆகஸ்ட் 04 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (04-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வியாபாரிகளுக்கு அற்புதமான நாள். நீண்ட நாள் பிரச்சனை நிவர்த்தியாகும். கடன் பிரச்சனை தீரும். வியாபாரத்தில் போட்டி, பந்தயங்களை சமாளிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை அனுசரணையாக இருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: கல்யாண பேச்சுவார்த்தை நடக்கும். சகோதரர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தை நடக்கும். செலவு செய்ய வேண்டிய அமைப்பு உண்டு.

மிதுனம்: அற்புதமான நாள். எல்லாம் கூடி வரும். நிறைய சொத்துக்கள் பெருகும் காலம். மூத்த சகோதரர்களின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். மூச்சு பிரச்சனை வரலாம். வருமானம் உயரக் கூடிய நாள்.

கடகம்: அற்புதமான நாள். முருகப் பெருமானை வழிபட வேண்டும். வாக்கு சாதுர்யம் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

சிம்மம்: தொண்டை, வயிறு தொடர்பான பிரச்சனை வரலாம். அற்புதமான காலகட்டம். அம்பாள் வழிபாடு செய்ய வேண்டும். திருவானைக்காவல் அகிலாண்டீஸ்வரியை வழிபட வேண்டும்.

கன்னி: கவனமாக இருக்க வேண்டும். உடல் உபாதைகளுக்கு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்கும் செய்து வரும். பிஸினஸில் கூடுதல் கவனம் தேவை. அலுவலக சூழல் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: அனுகூலமான காலகட்டம். மகாலட்சுமியின் அனுக்கிரகம் உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. நல்ல எண்ணங்கள் அதிகரிக்கும் நல்ல நாள்.

விருச்சிகம்: பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். துர்க்கையை வழிபாடு செய்ய வேண்டும். பட்டங்கள் பெரும் வாய்ப்புகள் வந்து சேரும். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரியை அனுசரித்து செல்ல வேண்டும்.

தனுசு: நன்மைகள் அதிகம் நடைபெறக் கூடிய மகிழ்ச்சிக்குரிய நாள். தாயாரது ஆதரவு உண்டு. மூத்த சகோதரியின் ஆதரவும் உண்டு. மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

மகரம்: மிகச்சிறந்த வெற்றிகள் உண்டு. சுகர் பிரச்சனை, இருதய பிரச்சனை இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. வியாபாரிகளுக்கு மிதமான லாபம் உண்டு.

கும்பம்: மகாலட்சுமியின் அனுக்கிரகம் உண்டு. வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தன பிராப்தி உண்டு. நல்ல முன்னேற்றம் உண்டாகும். சகோதரர்களின் உடல் நலனில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டு. வியாபார தொடர்புகள் விரிவடையும்.

மீனம்: வீண் கோபம் வரும். பொறுமையாக இருக்க வேண்டிய நாள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வியாபார தொடர்புகளுக்கு தேவையான கடனுதவி கிடைக்கும்.