நகைக் கடைக்காரர்களுக்கு வருமானம் கூடும்: மகரம் ராசி ஆவணி மாத பலன்!

131

நகைக் கடைக்காரர்களுக்கு வருமானம் கூடும்: மகரம் ராசி ஆவணி மாத பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் மகரம் ராசி ஆவணி மாத ராசி பலன்…

ஓரளவுக்கு நன்மை செய்யக்கூடிய மாதம் தான் இந்த மாதம். தடுமாற்றம் இருக்கும். எதையும் யோசித்து செய்வது நல்லது. போதிய பண வரவு உண்டு. ஆனால், வரும் பணம், வரவுக்கும், செலவுக்கும் சரியாகிவிடும். இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலையில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகள் தடை தாமதங்களுக்குப் பிறகே முடிவடையும்.

அசையா சொத்துக்கள் மூலம் வருமானம் பெருகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். படிக்கும் மாணவ, மாணவிகள் ரொம்ப நன்றாக படிக்கும் ஒரு நிலை. இடம் வாங்கி, விற்கும் அன்பர்களுக்கு ஒரு உன்னதமான மாதம். பிள்ளைகளால் கருத்து வேறுபாடு வரும். பங்கு வர்த்தக முதலீட்டாளர்கள், உள்நாட்டு வர்த்தகம், வெளிநாட்டு, வர்த்தகம், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், ஏற்றுமதி, இறக்குமாதியாளர்களுக்கு உன்னதமான ஒரு மாதம். நல்ல வருமானம் உண்டு.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் மகரம் ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

எதிரிகள் ஓடி ஒழிவார்கள். கடன் சுமை படிப்படியாக குறையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும். சொந்த தொழில் புரியும் பணியாளர்களுக்கு நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு வரும். குடும்ப உறுப்பினர்களும் பகை நிலை பாராட்டுவார்கள். வரும் விருந்தாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேச்சில் கவனம் தேவை.

கூட்டாளிகள் எதிரிகளாக மாறுவார்கள். அனுசரித்து செல்ல வேண்டும். திருமண வயதில் இருக்கும் அன்பர்களுக்கு பேச்சுவார்த்தை நடக்கும். ஆனால், முடியாது. இழுபறியாகவே இருக்கும். வராக் கடன் வசூலாகும். நகை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், ஆச்சாரி, நகை தொழிலாளிகள் என்று அனைவருக்கும் சிறப்பான மாதம்.