நகை, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு!

43

நகை, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு!

நவம்பர் மாதம் 26 ஆம் தேதியான இன்றைய (26-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (நவம்பர் 26 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: ஞாபக திறன் வளரும். குடும்ப பிரச்சனை தீரும். வருமானம் வந்து சேரும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். கனவரக வாகனங்கள் பழுதடையலாம்.

ரிஷபம்: வியாபாரிகளுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்: தன லாபம், மன தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய புதிய பதவிகள் வந்து சேரும். இறைவனின் அனுக்கிரகத்தால் உங்களது அன்பு பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். உடல் நலனில் அக்கறை வேண்டும். காது வலி பிரச்சனை வரலாம்.

கடகம்: பண விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலும் அளவாக செயல்பட வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. இனிய செய்தி தேடி வரும்.

சிம்மம்: தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். தன லாபம் வந்து சேரும். எதிர்பார்க்கும் காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: விநாயகரை வழிபட வேண்டும். சிறுதூர பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. அரசு ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபார வளர்ச்சி உண்டு. பெண்மணி ஒருவரால் உதவிகள் கிடைக்கும்.

துலாம்: நல்ல நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். நகைகள், அணிகலன்கள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. காரியங்களில் வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: தொட்டது துலங்கும் ஒரு அற்புதமான நாள். உடல் நல பாதிப்பு வரலாம். புதிய வரவு இருக்கலாம். நண்பர்களால் சில உபத்திரவங்கள் கூட இருக்கலாம்.

தனுசு: நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். செய்யும் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும்.

மகரம்: தன வரவு உண்டாகும். மன மகிழ்ச்சி ஏற்படும். அவப்பெயர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் நல தொந்தரவு வரலாம். கவனம் தேவை.

கும்பம்: பதற்றம் இருக்கும். உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டும். ஞாபக மறதி அதிகம் இருக்கும். சகல காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்: இனிய நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது. எதிரிகள் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.