நண்பர்களால் சோதனை வரும்!

38

நண்பர்களால் சோதனை வரும்!

நவம்பர் மாதம் 21 ஆம் தேதியான இன்றைய (21-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (நவம்பர் 21 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: தன வரவு உண்டு. திருமண செய்தி கூடி வரும். நல்ல நட்பு கிடைக்கும். பழைய பகை தீரும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். பிறரது அந்தரங்க விஷயங்களில் தலையிடக் கூடாது.

ரிஷபம்: எண்ணிய காரியங்கள் அனுகூலமாக முடியும். பொருளாதார உயரும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் கூடும். நண்பர்களால் நன்மை உண்டு. பண வருமானம் பெருகும். வியாபாரம் செழிக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்: அதிர்ஷ்டங்களை கொண்டு வந்து தரும். நிறைய செலவுகள் இருக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம்: இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் உண்டு. தோல் பிரச்சனை வரலாம். மனக்குழப்பங்கள் வந்து விலகும். தொட்டதெல்லாம் துலங்கும் நாள்.

சிம்மம்: வாழ்க்கையில் மெல்ல மெல்ல முன்னேறுவீர்கள். இறைவழிபாடு வெற்றி தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: வெளிநாட்டு தொடர்புகள் வெற்றியைத் தரும். வெளிநாடுகளில் பணிபுரிந்தவர்களுக்கு இருந்த பிரச்சனை தீரும். கணவன் மனைவி உறவு இனிப்பாக இருக்கும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் செல்லும். கலைஞர்களுக்கு ஏற்றம் உண்டு.

துலாம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிஸினஸ் ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும். திட்டமிட்டு காரியங்களை செயல்படுத்த வேண்டும். தன லாபம் தரும். திருமண செய்தி கை கூடி வரும். எண்ணிய காரியங்கள் இனிதாக முடியும்.

விருச்சிகம்: எந்தவொரு முயற்சியிலும் கவனம் வேண்டும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. கோப படக் கூடாது.

தனுசு: மென்மேலும் வெற்றிகள் தேடி வரக் கூடிய நல்லதொரு நாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் மாறுபட்ட சூழல் இருக்கலாம். நண்பர்களால் சோதனை வரலாம். சுப காரியங்கள் கூடி வரும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

மகரம்: இனிய நாள். ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். கடனுதவி கிடைக்கும். பூர்வ, புண்ணிய அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். சண்டை வந்து சமாதானமாக முடியும்.

கும்பம்: கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்தும் கொடுப்பீர்கள். விமர்சனத்தை ஒதுக்கி வைப்பது நல்லது. வீடு, மனை வாங்கும் யோக உண்டு. உடல் நலனில் அக்கறை வேண்டும். வாகன யோகம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

மீனம்: இனிய நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் அகலும். ஏராளமான நன்மைகள் நடைபெறும் நல்லதொரு நாள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வழியில் நல்ல செய்தி கிடைக்கும்.